Vegetables For Weight Loss : உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய சில காய்கறிகளை குறித்து இங்கு காணலாம்.
இந்த '5' காய்கறிகள் போதும்.. சர்னு உடல் எடையை குறைக்கலாம்!!
தற்போது உடல் பருமனால் பெரும்பாலானோர் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களது உணவில் அதிக அளவு காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றில் தான் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை செரிமானத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையை கற்றுக்கொள் வைக்க பெரிதும் உதவும். அதுபோல எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை மட்டுமே அதிகமாக சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் என்னென்ன காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
கீரை
கீரை உடல் எடையை குறைக்க உதவும். கீரையை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் இது தொப்பை குறைக்க உதவுவதாகவும் மருத்துவர்கள் சொல்லுகின்றனர். எனவே தினமும் கீரையை வேக வைத்து காலை உணவில் சேர்த்துக் கொண்டால் அதற்கான பலன்களை காண்பீர்கள் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
36
கேரட்
பொதுவாக பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் எடையை குறைக்கும் பண்புகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் கேரட். இதில் நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. அவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவிகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உங்களது உணவில் கேரட் சேர்த்துக் கொள்ளுங்கள்.
46
காளான்
காளான் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். காளானில் இருக்கும் பண்புகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி எடையை மற்றும் கொழுப்பை எரிக்க உதவும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றன. முக்கியமாக காளான் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. காளானில் புரதம் அதிக அளவு உள்ளதால் அது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து விரைவில் எடையை குறைக்க உதவுகிறது.
குடைமிளகாய் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளன. இவை உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. குடைமிளகாய் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குடைமிளகாயை உங்களது உணவில் தினமும் சேர்த்து கொள்ளுங்கள்.
காலிஃப்ளவர் சுவையான உணவுகளில் ஒன்றாகும். இதில் குறைந்த கலோரி உள்ளன. இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு சுத்தமாகவே இல்லை. இதில் சோடியம் குறைவாகவும், அதிகமாகவும் உள்ளதால் இது உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுபோல இதில் இருக்கும் வைட்டமின் சி தசை மற்றும் எலும்புகளை வலுவாக வைக்க உதவும். எனவே காலிபிளவரை நீங்கள் சூப்பாகவோ அல்லது உங்களது சுவைக்கு ஏற்றவாறு செய்து சாப்பிடுங்கள்.