கெட்ட கொழுப்பை குறைக்க ஒருவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? 

Published : Apr 15, 2025, 09:48 AM IST

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து எடை இழப்பு ஏற்பட எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம். 

PREV
15
கெட்ட கொழுப்பை குறைக்க ஒருவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? 
Walking Tips

How Many Steps One Should Walk to Reduce Excess Body Fat : நடைபயிற்சி என்பது எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்யக்கூடிய எளிமையான கார்டியோ பயிற்சியாகும்.  இந்த பயிற்சிக்கென எந்த உபகரணங்களும் தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.  ஆனால் உடல் எடையை குறைக்க நடைபயிற்சி மேற்கொள்ளபவர்கள் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என ஒரு குழப்பம் நிலவி வருகிறது. இந்த பதிவில் எடையை குறைக்க எப்படி எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என காணலாம். 

25
Walking for Weight Loss

எடை இழக்க வாக்கிங்: 

ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் நடைபயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். தொடர்ந்து நடக்கும்போது உடலுக்கு சகிப்புத்தன்மை கிடைக்கும்.  இதனால் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் நடக்க முடியும். சாதாரணமாக தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடப்பதை வழக்கமாகி கொண்டால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதுவே எடை இழப்புக்கு உதவும். ஆரம்பத்தில் 2 முதல் 3 கிமீ நடந்து பழகினால்  நாளடைவில் 5 முதல் 7 கிலோமீட்டர் வரை நடக்கும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. 

35
Step Count for Weight Loss

எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? 

நீங்கள் ஒரு நாளில் 5 முதல் 7 கிலோமீட்டர் வரை நடைபயிற்சி செய்தால் கிட்டத்தட்ட 7000 முதல் 10 ஆயிரம் காலடிகளை நடந்திருப்பீர்கள். 10 காலடிகள் என்பது 8 கிமீ நடந்ததற்கு சமமானது. ஆனால் எல்லோரும் இந்த இலக்கை அடைவது கடினம். அதனால் தினமும் விறுவிறுப்பாக 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள். 

இதையும் படிங்க:  பொய்யான 'வாக்கிங்' கட்டுக்கதைகளும் உண்மைகளும்!! 

45
Walking Tips

ஆய்வில் தகவல்! 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தினமும் 7,000 முதல் 8,000 காலடிகள் நடந்தாலும் இதய ஆரோக்கியம் மேம்படும்,  மனநிலை சீராகும் என தெரிவிக்கின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைகிறது. 

இதையும் படிங்க:  தினமும் காலை வெறும் வயிற்றில் வாக்கிங்!! பலரும் தெரியாம பண்ற மிஸ்டேக் இதுதான்

 

55
Walking Tips

தினமும் நடப்பது ஆஸ்டியோபோரோசிஸ் மாதிரியான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நடைபயிற்சி உதவுகிறது.  எண்டோர்பின்களை வெளியிடுவதால் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories