சர்க்கரை நோய் வந்த கர்ப்பிணிகள் இந்த உணவை மறந்து கூட சாப்பிடாதீங்க!
கர்ப்பிணி பெண்ணிற்கு சர்க்கரை நோய் வந்தால் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்ணிற்கு சர்க்கரை நோய் வந்தால் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Foods and Drinks To Avoid For Gestational Diabetes : கர்ப்ப காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான நோய் சர்க்கரை நோய். இது டைப் 2 நீரிழிவு நோய் போன்றது ஆகும். அதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்ததும் இது சரியாகிவிடும். மேலும் சில ஆய்வுகளின் படி, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் வந்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் வந்தால் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் ஆபத்தா?
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் வந்தால் மிகவும் கவனமாக அவர்களை கவனிக்க வேண்டும். சரியான முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். இதனால் முன்கூட்டியே பிறப்பு உண்டாகும். எனவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க கர்ப்ப காலத்தில் சில உணவுகள் சாப்பிடுவது அவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் சில உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவை சாதாரண வரம்புக்குள் வைத்திருக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் :
அதிக சர்க்கரை உள்ள உணவுகள் - அதிக சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை கர்ப்பிணிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தும். குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே ஐஸ்கிரீம், பீட்சா, கேக், டோனட்ஸ், மைதா உணவுகள் போன்ற இனிப்புகளை கண்டிப்பாக கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
பேரிச்சம் பழம் - கர்ப்பிணிகள் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து கிடைக்கும். அதுபோல உலர் திராட்சையும் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் இவை இரண்டையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கிளைசெமிக் குறியீடு அதிகம் கொண்டுள்ளதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். அதற்கு பதிலாக பாதாம், பிஸ்தா, நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
இதையும் படிங்க: Summer Pregnancy Tips : கர்ப்பிணிகளை தாக்கும் கோடை கால பிரச்சினைகள் இவையே..!!
டிரான்ஸ் கொழுப்புகள்:
கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்க கூடியது. சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகளில் வறுத்த உணவுகளும் அடங்கும். அதுபோல மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் இந்த 6 அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க.. பிரச்சனையாகிடும்!
பழச்சாறு:
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வருவது பொதுவானது. அதை சமாளிக்க பழசாறு குடிப்பது வழக்கம். ஆனால் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் பழசாறு குடிப்பதற்கு பதிலாக ஒரு பழத்தை சாப்பிடலாம். ஏனெனில் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும். இது குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் முழுமையாக கிடைக்கும்.
சர்க்கரை பானங்கள்:
சோடா, ஜூஸ் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை கர்ப்பிணிகள் பொதுவாக தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் இதை குடித்தால் அது ரத்த சர்க்கரை அளவை உடனே அதிகரிக்க செய்துவிடும். சர்க்கரை பானங்களில் பூஜ்ஜியம் ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. எனவே இதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் வெள்ளரி ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை குடிக்கலாம். இது தவிர சர்க்கரை சேர்க்காத டீ காபி அளவாக குடிக்கலாம்.
குறிப்பு : மேலே சொன்ன விஷயங்களை தவிர தினமும் உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.