தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் சென்றால் வயதானவர்கள் ஆயுள் அதிகரிக்கும் தெரியுமா? 

Published : Apr 21, 2025, 08:23 AM ISTUpdated : Apr 21, 2025, 08:29 AM IST

தினமும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது வயதான செயல்முறையை தாமதமாக்குகிறது. இதனால் இறப்பு அபாயமும் குறைகிறது. 

PREV
14
தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் சென்றால் வயதானவர்கள் ஆயுள் அதிகரிக்கும் தெரியுமா? 

How Many Minutes Walking Could Help Older Adults Live Longer : நடைபயிற்சி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என அனைவருக்கும் தெரியும்.  ஆனால் வயதானவர்கள் தினமும் நடைபயிற்சி செய்யவும்போது அவர்களுடைய ஆயுள் அதிகரிப்பது குறித்து பலர் அறிந்து வைத்திருப்பதில்லை. தினமும் நடைபயிற்சி செய்வது நாள்பட்ட நோய்களிலிருந்து முதியோரை பாதுகாக்கிறது. வயதாகும் செயல்முறையும் தாமதப்படுகிறது. 

24
Benefits of Walking for Older Adults

நடைபயிற்சி ஏன் முக்கியம்? 

சுமார் 85 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதை காட்டிலும்  வாரத்திற்கு ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்தாலும் நல்லது என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தினமும் நடைபயிற்சி செல்ல வேண்டும். அண்மையில் செய்யப்பட்ட ஆய்வில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 1 மணிநேரம் நடப்பதால் கூட   இதய நோய்களால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்கிறது. 

இதையும் படிங்க: வெறும் '2' நிமிடங்கள் சாப்பிட்ட பின் வாக்கிங்!நீரிழிவு நோயை விரட்ட சூப்பர் டிப்ஸ்!! 

34
Benefits of Walking for Older Adults

உடல் செயல்பாடு; 

அனைத்து வயதானவர்களும் மிதமான அல்லது தீவிர உடல் உடற்பயிற்சிகளில் ஈடுபட முடியாதவர்கள். அதனால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டால் போதுமானது. எதுவுமே செய்யாதவர்களை காட்டிலும் வாரத்திற்கு 1 மணிநேரம் நடக்க முயற்சி செய்யும் வயதானோர்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது.  அவர்களுக்கு இறப்பு, இதய  நோய்களுக்கான அபாயம் குறைவாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. 

இதையும் படிங்க:  வயசானவங்க வெறும் '5' நிமிஷங்கள் பின்னோக்கி நடப்பதால் இத்தனை நன்மைகளா?  

44
Benefits of Walking for Older Adults

எவ்வளவு நிமிடங்கள் வாக்கிங்? 

அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில்  பெரியவர்களுக்கு ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி போன்ற உடற்செயல்பாடு அவசியம் என தெரியவந்தது. நடைபயிற்சியை தவிர சற்று தீவிரம் கொண்ட ஓடுதல் (ரன்னிங்) அல்லது மெதுவாக ஓடுதல் (ஜாகிங்) போன்றவை 75 நிமிடங்கள் செய்யலாம். கட்டாயம் ஓட வேண்டும் அல்லது கட்டாயம் விறுவிறுப்பாக நடக்க வேண்டும் என்றில்லை. வயதானவர்கள் அவர்கள் உடல்நிலைக்கு ஏற்றபடி பயிற்சி செய்யலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடை தூக்குதல் அல்லது உடல் எடை பயிற்சிகள் உள்ளிட்ட தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories