கர்ப்பமாக இருக்கப்ப இடுப்பு, வயிறு சுற்றி அரிக்குதா? பல பெண்கள் அறியா காரணம்

Published : Apr 19, 2025, 12:53 PM ISTUpdated : Apr 19, 2025, 01:02 PM IST

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இடுப்பு மற்றும் வயிறு சுற்றி அரிப்பு ஏற்படும். இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
கர்ப்பமாக இருக்கப்ப இடுப்பு, வயிறு சுற்றி அரிக்குதா? பல பெண்கள் அறியா காரணம்

Causes of Itching Stomach and Hips During Pregnancy : கர்ப்ப காலத்தில் அசெளகரியம் வருவது பொதுவானது. நீரிழிவு, இரத்த அழுத்தம், வாந்தி, வீக்கம், மசக்கை போன்றவை கர்ப்ப காலத்தில் உண்டாகும். இது தவிர சருமத்தில் அரிப்பும் ஏற்படும். அதுவும் குறிப்பாக இடுப்பு, வயிற்று பகுதியில் அரிப்பு உண்டாகும். இந்த பிரச்சனை பொதுவானது அல்ல. வெகுசில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் இந்த பிரச்சனை குழந்தை பிறக்கும் வரை இருக்கும். 

25
Causes of Itching During Pregnancy

கர்ப்ப காலத்தில் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் அரிப்பு ஏற்படுவது சாதாரணமானது என்றாலும், இதற்கான காரணங்கள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோய் வந்த கர்ப்பிணிகள் இந்த உணவை மறந்து கூட சாப்பிடாதீங்க!

35
Causes of Itching During Pregnancy

1. ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சரும வறட்சியாகி அரிப்பை ஏற்படுத்தும்.

2. கர்ப்பப்பை வளரும் போது வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தோள்கள் விரிவடையும். இதன் விளைவாக அரிப்பு ஏற்படும்.

3. கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பின் காரணமாக அரிப்பு ஏற்படும். இதுதவிர பிற பகுதியில் வயிற்றில் தோல் நீட்டிக்கப்படும் போது அரிப்பு ஏற்படும். இந்த மாதிரியான நேரத்தில் தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். அதுதான் நல்லது.

4. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது அரிப்பு வரலாம். ஆசன வாயை சுற்றிய வீக்கம், மூலநோய், அரிப்பு, வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

5. சில நேரங்களில் சில உடல் நலக்குறைபாட்டின் காரணமாகவும் அரிப்பு ஏற்படும்.

45
Causes of Itching During Pregnancy

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?

- அறிவு அதிகமாக இருக்கும் போது அல்லது பரவும் போது

- அரிப்பு தவிர படைநோய், வீக்கம், போன்றவை இருந்தால்

- அறிவு பிரச்சனை ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடித்தால்

- அரிப்பு கர்ப்பத்தின் பிற்ப்பகுதியில் ஏற்பட்டால்

- அரிப்பால் சரியாக தூங்க முடியவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

55
Causes of Itching During Pregnancy

அரிப்பை போக்க என்ன செய்வது?

- ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

- சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  கர்ப்பிணிகள்  லெகின்ஸ் போடாதீங்க!! இந்த பிரச்சனையோட அதிர்ச்சி பின்னணி  தெரியுமா? 

Read more Photos on
click me!

Recommended Stories