நடைபயிற்சி வெறும் கால்களை அசைக்கும் பயிற்சியல்ல; ஒட்டுமொத்த உடலையும் சீராக வைக்கும் பயிற்சியாகும். வாக்கிங் செல்லும்போது செல்போன் பார்த்துக் கொண்டே நடப்பது பெரும்தவறாகும். இதனால் உங்களுடைய உடல் தோரணை மாறுகிறது. மோசமான தோரணையில் நடந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படும். சோர்வும் அசௌகரியமும் மட்டுமின்றி மனநிலை, சுவாசம், தூக்கத்தின் தரமும் பாதிப்பதாக ஹார்வர்ட் ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து இப்படி நடந்தால் மோசமான தோரணை, நாள்பட்ட வலி, நீண்டகால தசைக்கூட்டு பிரச்சினைகள் வரக் கூடும். எனவே நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையுடன் நடக்க வேண்டும்.