வீட்டுக்கு வெளியே சிலரால் வாக்கிங் செல்ல முடியாது. அதற்காக நடைப்பயிற்சியே செய்யாமல் இருக்கக்கூடாது. 50 வயதுக்கு மேல் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். அதற்கு வாக்கிங் சிறந்த வழியாகும். நேராக நடப்பதோடு உடலுக்கு சமநிலை, ஒருங்கிணைப்பு, சகிப்புத்தன்மை போன்ற சவால்களையும் செய்யும் வகையில் நடக்க சில குறிப்புகளை இங்கு காணலாம்.
26
லேடர் வாக்கிங்
இந்த முறையில் ஏணியில் ஏறுவதுபோல சின்ன சின்ன அடிகளை வைக்க வேண்டும். தரையில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு ஏணி இருப்பது போல வேகமாக முன்னோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலடிகளுக்கு பின் அடிகளை பின்னோக்கி எடுத்து வைக்கலாம். இப்படி முன்னும் பின்னும் நடந்தால் இதய வேகமாக துடிக்கும். நல்ல கார்டியோ பயிற்சியாக இருக்கும். 50 வயதில் இது மிகவும் நல்ல பயிற்சி. நாளடைவில் இப்படி முன்னும் பின்னும் நடப்பது சுறுசுறுப்பை அதிகமாக்கி, உடலில் சகிப்புத்தன்மையை உருவாக்குகிறது.
36
டைகனல் வாக்கிங்
ஒரு அறையில் குறுக்கே உள்ள மூலைக்கும் எதிரே உள்ள மூலைக்கும் குறுக்காக நடக்க வேண்டும். இது வீட்டிற்குள் நீண்ட நடைப் பாதையை உருவாக்கும். இப்படி நடக்குமோது ஆழமான சுவாசம் ஏற்பட்டு நுரையீரல் திறன் மேம்படுகிறது. குறுக்காக நடப்பதால் உடற்பகுதியில் உள்ள தசைகளை மெதுவாக ஈடுபடுத்தும். சகிப்புத்தன்மையை மேம்படுத்தி வயதாகும்போது உடலை இலகுவாக்கவும், இயக்கவும் உதவும்.
பெரிய வட்டத்தில் நடக்கலாம். இது திரும்பத் திரும்ப நடப்பது மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு சுற்றிலும் சற்று வேகத்தை கூட்டி அதிக காலடிகளை சேர்ப்பது சகிப்புத்தன்மையை மேம்படுத்தும். இது இடைவெளி பயிற்சி மாதிரி செயல்பட்டு இதயத் துடிப்பையும் அதிகரிக்கும். ரன்னிங் அல்லது அதிக உடற்பயிற்சி செய்யாமலேயே இதய அமைப்பை பலப்படுத்த இது சிறந்த முறையாகும்.
56
ஸ்டெப் அண்ட் பாஸ் வாக்கிங்
இந்த முறையில் 4 முதல் 5 அடிகள் நடந்துவிட்டு, சில வினாடிகள் இடைநிறுத்த வேண்டும். மீண்டும் நடக்க வேண்டும். இந்த இடைநிறுத்தம் உடலை மீண்டும் இயங்கத் தூண்டும். இப்படி நிறுத்தி நிறுத்தி நடப்பது தசை சகிப்புத்தன்மையை வலுப்படுத்தும். படிக்கட்டுகள் அல்லது நெரிசலான இடங்களில் நாம் சற்று நின்று தாமதமாக மீண்டும் நடப்பது போன்றது இந்த முறை.
66
எட்டு வடிவ வாக்கிங்
இந்த முறையில் நடந்தால் தொடர்ந்து திசைகளை மாற்ற வேண்டும். இது கால்கள், மைய தசைகள் இரண்டையும் நன்கு இயக்குகிறது. சோதிக்கிறது, நேராக நடப்பதைவிட இதில் நுட்பமான திருப்பங்கள் இருக்கும். இடுப்பு, கீழ் முதுகு தசைகளை இந்த வாக்கிங் முறை இயக்கி வலுப்படுத்தும். பெரிய ஹால் அல்லது மாடியில் நாள்தோறும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டும் எட்டு வடிவத்தில் நடந்தால் மூட்டுகளை வலுவாக்கும். வயதாகும்போது சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.