Women's Health: பெண்களே.. 20-லேயே 40 மாதிரி தெரியுறீங்களா? உடனடியாக கைவிட வேண்டிய 5 பழக்கங்கள் இதுதான்!

Published : Aug 14, 2026, 07:29 PM IST

Women's Health: சில பெண்களுக்கு, வயசுக்கு முன்னாடியே முகத்துல சுருக்கம், சரும பொலிவு குறைஞ்சு வயசான தோற்றம் வந்துடும். எந்த மாதிரி பெண்கள் சீக்கிரமா வயசானவங்க மாதிரி தெரிவாங்கன்னு நிபுணர்கள் சொல்றத இங்க பார்க்கலாம்.

PREV
16
பெண்கள் சீக்கிரம் வயசான தோற்றத்தை அடைய காரணங்கள்

வயசு ஆகுறது இயற்கையான ஒரு விஷயம்தான். ஆனா பெண்கள் சிலருக்கு வயசுக்கு முன்னாடியே சருமத்துல சுருக்கம், சோர்வு, முடி நரைக்கிறது, தெம்பு இல்லாதது மாதிரி வயசான தோற்றம் வந்துடும். இதுக்கு மரபணு மட்டும் காரணம் இல்ல, நம்மளோட அன்றாட வாழ்க்கை முறை, சாப்பாடு, தூக்கம், மன அழுத்தம்னு பல விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்குதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க. சில பழக்கங்கள் சீக்கிரமே வயசான தோற்றத்தைக் கொடுத்துடும். அந்த 5 முக்கியமான பழக்கங்கள் என்னன்னு இப்போ பார்க்கலாம்.

இதையும் படிங்க: Cooker Cleaning: அடிபிடித்த குக்கர் புதுசு போல ஜொலிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்.. மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம்!

26
எந்நேரமும் டென்ஷனில் வாழும் பெண்கள்

குடும்பப் பொறுப்பு, வேலை டென்ஷன், பணப் பிரச்சனைன்னு சில பெண்கள் எப்பவுமே மன அழுத்தத்துல இருப்பாங்க. இந்த மாதிரி அதிக நாள் நீடிக்கிற ஸ்ட்ரெஸ், உடம்புல கார்டிசோல் (cortisol) ஹார்மோனை அதிகமா சுரக்க வைக்கும். இதனால தூக்கம் கெட்டு, சருமம் பொலிவிழந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். அதனாலதான் தியானம், யோகா, வாக்கிங், பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க நிபுணர்கள் சொல்றாங்க.

இதையும் படிங்க: Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!

36
தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள்

ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் நல்லா தூங்குறது, உடம்புல இருக்க செல்களைப் புதுப்பிக்க ரொம்ப முக்கியம். தூக்கம் சரியா இல்லைன்னா, கண்ணுக்குக் கீழ கருவளையம், முகத்துல சோர்வு, சரும பொலிவு குறைஞ்சு போறது மாதிரி அறிகுறிகள் தெரியும். ரொம்ப நாளா தூக்கமின்மை தொடர்ந்தா, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். அதனால தினமும் ஒரே நேரத்துல தூங்கி, தூங்குறதுக்கு முன்னாடி மொபைல் பார்க்குறதைக் குறைச்சுக்கிறது நல்லதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க.

இதையும் படிங்க: Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?

46
சத்தான உணவை புறக்கணிக்கும் பெண்கள்
நிறைய பெண்கள் தங்களோட சாப்பாட்டுக்கு கடைசி இடம்தான் கொடுப்பாங்க. சாப்பாட்டை ஸ்கிப் பண்றது, ஜங்க் ஃபுட் அதிகமா சாப்பிடுறது, பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் கம்மியா எடுத்துக்கிறதுனால உடம்புக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்காம போகலாம். இதனால சருமம் வறண்டு, முடி கொட்டி, தெம்பு இல்லாம போகலாம். சரிவிகித உணவு, போதுமான தண்ணீர், சீசன் பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள் எடுத்துக்கிறது ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க.
56
உடற்பயிற்சியை விட்டு விலகியிருக்கும் பெண்கள்
நாள் முழுக்க ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பார்க்குற வாழ்க்கை முறை, உடம்பை மெதுவா பலவீனமாக்கிடும். தசைகள் வலுவிழந்து, எடை கூடி, எலும்புகளோட ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு. தினமும் வாக்கிங், யோகா, சைக்கிளிங் அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யுறதுனால ரத்த ஓட்டம் சீராகும். இது உடம்புக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லது.
66
சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள்
வெயில்ல அதிக நேரம் இருக்குற பெண்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்தாம இருக்கிறது கூட சருமத்தை பாதிக்கும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துறது, போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறது, சருமத்தை சரியா பராமரிக்கிறது மாதிரியான பழக்கங்கள் நீண்ட காலத்துல சரும ஆரோக்கியத்துக்கு உதவும். அதே மாதிரி, புகைப்பிடித்தல், மது அருந்துவதும் சருமத்துக்குக் கெடுதல்னு ஆய்வுகள் சொல்லுது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினா, உடலையும் மனசையும் நீண்ட காலம் இளமையா வச்சுக்கலாம்.
Read more Photos on
click me!

Recommended Stories