Walk Your Way to Weight Loss: The Benefits of Empty Stomach Walking : எடையை குறைக்க நடைபயிற்சி செய்வது எளிமையான ஒன்றாகும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளுக்கும் நடைபயிற்சி உதவுகிறது. பல ஆய்வுகளில் தினமும் நடைபயிற்சி செய்வதால் உடல், மன ஆரோக்கியம் மேம்படும் என தெரியவந்துள்ளது. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் அவருக்கு கணிசமான எடை குறையும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் நடப்பதால் அவருடைய கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு உடலில் கலோரி பற்றாக்குறையை உருவாக்கி எடை குறைய செய்கிறது. வெறும் நடைபயிற்சி மட்டும்போதாது. ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
25
மிலன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில், சில வினாடிகள் நடப்பது கூட நன்மைகளை வழங்குகிறதாம். அதாவது வெறும் 10 வினாடிகள் வரை போடும் 'மைக்ரோ-வாக்கிங்' என்ற குறுநடை கூட ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவர் 10 முதல் 30 வினாடிகள் வரை வேகமாக நடக்கும்போதும் பலன் பெறுகிறார். 30 வினாடிகளுக்கு பின் இடைவெளிவிட்டு மீண்டும் அதே போல நடக்க வேண்டும். இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் எடை விரைவில் குறையும். ஆனால் எடை குறைப்பு பயணத்தில் மற்றொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டிதாக உள்ளது. அது காலையில் எப்படி நடக்க வேண்டும்? என்பது தான். எடையை குறைக்க வெறும் வயிற்றில் தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டுமா? என்பதை குறித்து இங்கு காணலாம்.
35
வெறும் வயிற்றில் வாக்கிங்:
எடையை குறைக்க விரும்பும் பலர் வெறும் வயிற்றில் தான் நடைபயிற்சி செய்கிறார்கள். காலையில் அதிகமான கலோரிகளை எரிக்க வெறும் வயிற்றில் நடப்பது உதவுவதாக பரவலாக ஒரு நம்பிக்கை உள்ளது. அது உண்மையும் கூட. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து எடை குறைய உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் நடந்தால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடையைக் குறைக்க உதவும். ஆய்வுகள் கூட வெறும் வயிற்றில் நடப்பதால் உடல் எடை மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமாக கரையும் என கூறுகின்றன. சர்வதேச உடல் பருமன் இதழில் வெளியான தகவல்களில், நடைபயிற்சி உள்ளுறுப்பு கொழுப்பு திசுக்களைக் குறைக்க உதவுவதாக குறிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்தில் மூன்று முறையாவது நடைபயிற்சி என 12 முதல் 16 வாரங்களுக்கு உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் குறையும். மிதமான ஏரோபிக் பயிற்சியான நடைபயிற்சியை கூட 30 முதல் 60 நிமிடங்கள் செய்யலாம்.
தொப்பை கொழுப்பு அல்லது எந்த கொழுப்பாக இருந்தாலும் நடக்கும்போது குறையும். அதிலும் வெறும் வயிற்றில் நடந்தால் அப்போது தொப்பை கொழுப்பு மட்டுமல்ல உடலில் உள்ள எல்லா வகை கொழுப்பு குறையவும் உதவும். நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழக ஆய்வில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களை காட்டிலும் 70% அதிக கொழுப்பை எரிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.