அடிக்கடி கொட்டாவி விடுறீங்களா? இதுதான் காரணமா இருக்கும்!! 

கொட்டாவி விடுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் அடிக்கடி கொட்டாவி விட்டால் அதற்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம். அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

 Why You're Yawning Too Much : கொட்டாவி விடுவது என்பது ஒரு பொதுவான விஷயம். இது பெரும்பாலும் தூக்கம் அல்லது சோர்வுடன் தொடர்டையது. ஆனால் உங்களுக்கு அடிக்கடி கொட்டாய் வருகிறது என்றால் அது பல உடல் பிரச்சினைகளில் அறிகுறியாகும். ஆம், உண்மையில் அதிகப்படியாக கொட்டாவி விடுவது மனநல பிரச்சனைகள் மற்றும் இதய பிரச்சினைகள் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை குறிக்கின்றன என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். அதுமட்டுமின்றி உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருவதோடு மட்டுமன்றி, அதனுடன் சேர்த்து சோர்வு, மூச்சு திணறல், தலை சுற்றல் போன்ற பிற அறிகுறிகளும் வந்தால் அசட்டாக இருக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இது தீவிரமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும்.

Reasons Why You're Yawning Too Much in tamil mks
அடிக்கடி கொட்டாவி வருவதற்கான காரணங்கள்:

தூக்கமின்மை : உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அடிக்கடி கொட்டாவி வரும்.

சோர்வு : மனம் மற்றும் உடல் சோர்வாக இருந்தால் கண்டிப்பாக அடிக்கடி கொட்டாவி வருவதைத் தூண்டும்.

இதய பிரச்சினை : அதிகப்படியான கொட்டாவி வருவது மூளையில் இருந்து இதயம் மற்றும் வயிற்றுக்கு செல்லும் நரம்புடன் தொடர்புடையது.

நரம்பு பிரச்சனை : சில சமயம் அதிகப்படியான கொட்டாவி விடுவது நரம்பியல் போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

மூளை பிரச்சனை : சில பேருக்கு அதிகப்படியான கொட்டாவி வருவது மூளையில் கட்டி இருப்பதை குறிக்கும். ஆனால் இது மிகவும் அரிதானது தான்.
 


இரும்புச்சத்து குறைபாடு:

ஒரு மனிதனின் உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜன் போக்குவரத்திற்கு உதவுகிறது. ஒருவேளை இரும்புச்சத்து குறைவாக இருந்தால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறையக்கூடும். இதனால் கொட்டாவி விடுவது அதிகரிக்கும். நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை தூக்கத்தில் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளும் கொட்டாவி விடுவதற்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க:   கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

அடிக்கடி கொட்டாவி விடுவதை சரி செய்வது எப்படி?

- உங்களது தூக்கத்தின் தரத்தை பயன்படுத்துவதன் மூலம் இதை சரி செய்து கொள்ளலாம் இதற்கு நீங்கள் வழக்கமான தூக்கம் முறை மற்றும் தூங்கும் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

- உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- அதுபோல உடலை எப்போது நீரேச்சமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

இதையும் படிங்க:  ஒருத்தர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் கொட்டாவி வருதே ஏன் தெரியுமா? அதுக்கு இப்படி ஒரு வரலாறா?! 

Latest Videos

vuukle one pixel image
click me!