Rajma Who Can Eat It and Who Can't Eat It : ராஜ்மா என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இது பார்ப்பதற்கு மனிதனின் கிட்னி போன்று இருப்பதால், கிட்னி பீன்ஸ் (kidney beans) என்று அழைக்கப்படுகிறது. இந்த பருப்பு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டது. இவை பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் இருக்கின்றது. ராஜ்மாவில் புரதச்சத்து, கால்சியம், கார்போஹைட், ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைத்துள்ளது. இவை உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில் ராஜ்மாவை யாரெல்லாம் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
ராஜ்மா நன்மைகள்:
- ராஜ்மா எடை இழப்புக்கும், பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவிகிறது. இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும், சிக்கலான கார்போஹைட்ரேட்டும் உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. ஆனால் ராஜ்மாவை எப்போது சாப்பிடுவதற்கு முன் அதை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- ராஜ்மா பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன.
- ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு கப் ராஜ்மா சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதற்கு மேல் சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாயு, வீக்கம் ஏற்படும்.
- அதுபோல ராஜ்மா சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே ராஜ்மாவை சாப்பிடும்போது அசெளகரியமாக உணர்ந்தால் உடனே சாப்பிடுவதே நிறுத்துங்கள்.
- உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை, செரிமானக் கோளாறு பிரச்சனை இருந்தால் ராஜ்மாவை அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் ஆக்சலேட் உள்ளதால் இது உங்களது பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். முக்கியமாக சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் ராஜ்மாவை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அது சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு வழி வகுக்கும்.
- ராஜ்மா ஜீரணிக்க கடினமாக இருக்கும். குறிப்பாக குடல் நோய் அல்லது பிறர் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு மற்றும் பிற வயிற்று தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இதை தவிர்க்க ராஜ்மாவை இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு காலையில் நன்கு சமைத்து சாப்பிட்டால் செரிமானத்தை மேம்படுத்தும்.
55
ஆய்வுகள் சொல்வது என்ன?
ராஜ்மாவால் உடல் பருமன், நீரிழிவு நோய், உயரத்தை அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் உறுதியாக கூறுகின்றனர்.