Chocolate and Hypertension : சாக்லேட் சாப்பிடுறது பிபியை குறைக்குமா?! எல்லோருக்கும் கட்டாயம் தெரிய வேண்டிய தகவல்!!

Published : Nov 04, 2025, 11:02 AM IST

சாக்லேட் சாப்பிடுவது பிபியை குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எந்த சாக்லேட், எவ்வளவு சாப்பிட வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

PREV
16

கோகோ ஃபிளவனால்கள் நிறைந்த சாக்லேட் இதய அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் கோகோ ஃபிளவனோல்கள் அதிகம் இருப்பதால் வாஸ்குலர் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

26

இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஃபிளவனோல் நிறைந்த கோகோ அதிகமுள்ள டார்க் சாக்லேட் உதவும். ஆனாலும் இது எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மூன்றுமே சரியாக இருக்க வேண்டும்.

36

டார்க் சாக்லேட் தேர்வு செய்வது எப்படி?

இரண்டு ஆண்டுகள் அளவாக டார்க் சாக்லேட் எடுத்துக் கொண்டவர்களுக்கு இதன் நன்மைகள் வெளிப்பட்டுள்ளன. இதற்கு ஃபிளாவனால்கள் அதிகம் இருக்கும் டார்க் சாக்லேட் அல்லது அதிக கோகோ பொருட்களை தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை கணிசமான நன்மைகளைச் செய்யும். உதாரணமாக 70% கோகோ உள்ளடக்கம் இருக்கும் டார்க் சாக்லேட்டை தேர்வு செய்து உண்ணலாம்.

46

ஆராய்ச்சியாளர்கள் சொல்கிற தகவல்களின்படி, ஏற்கனவே நீங்கள் சாதாரண இரத்த அழுத்தம் (SBP < 120 mmHg) கொண்டவராக இருந்தால், கோகோ ஃபிளவனால்கள் உங்களுக்கு பிபியை தடுக்கும். ஏற்கனபே பிபி இருந்தால், அதற்கென எடுக்கும் மருந்துகளுடன் டார்க் சாக்லெட் ஆதரவாக செயல்படும்.

56

ஒரு துண்டு சதுர டார்க் சாக்லேட் ஒரே இரவில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குகொண்டு வராது. நல்ல வாழ்க்கைமுறையுடன் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். நல்ல தூக்கம், மன அழுத்தமில்லாத மனநிலை, உடற்பயிற்சி, நல்ல உணவுடன் ஒரு துண்டு டார்க் சாக்லேட் பிபியை குறைக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.

66

கவனம்

எடை குறைக்க நினைப்பவர்கள் டார்க் சாக்லேட்டை மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் உண்பதால் அதிக கலோரிகள் எடையை அதிகரிக்கலாம். வகை 2 நீரிழிவு பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories