காலையில் தூங்கி எழுந்ததும் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா?இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காலையில் தலைவலியோடு எழுவது அந்த நாளை மிகவும் மோசமாகிவிடும். இதனால் எந்தவொரு வேலையும் கூட செய்ய முடியாமல் போகும். இந்த தலைவலி எதனால் வருகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
29
தூக்கமின்மை :
நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால், காலையில் எழும்போது தலைவலிக்கும். அதுவும் நீண்ட நாட்கள் தூங்காதவர்கள் கண்டிப்பாக இன்சோம்னியாவால் பாதிக்கப்படுவர். இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு சில சமயங்களில் காலையில் தலைவலி அதிகமாகவே இருக்கும். இதற்கு தீர்வு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது தான்.
39
நீண்ட நேரம் தூங்குதல் :
நீங்கள் நீண்ட நேரம் தூங்கினால் காலையில் கண்டிப்பாக தலைவலிக்கும். ஏனெனில் அதிக நேரம் தூங்கினால் உங்களது இயற்கையான தூக்க சுழற்சி பாதிக்கப்படும். இதன் காரணமாக தலைவலி ஏற்படும்.
மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான கவலை தலைவலியை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் மன அழுத்தம் தூக்கத்தையும் பாதிக்கும் எனவே உங்களுக்கு மன அழுத்த பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் சென்று சரியான ஆலோசனை பெறுங்கள்.
59
தூங்கும் போது மூச்சு திணறல் :
தூக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் இரவு உங்களது தூக்கம் பாதிக்கப்படும். சரியான தூக்கம் இல்லையென்றால் காலை எழுந்ததும் தலைவலி ஏற்படும்.
69
பற்களை கடிப்பது :
உங்களுக்கு பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால், காலையில் எழுந்ததும் தலைவலி உண்டாகும். பற்களை அடிக்கடி கடித்தால் தாடை மூட்டுகளில் வலி ஏற்பட்டு இதன் காரணமாக தலைவலிக்க ஆரம்பிக்கும்.
79
கழுத்து தசைப்பிடிப்பு :
நீங்கள் சரியான நிலையில் தூங்காத போது கழுத்து தசைகளில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகி தலைவலியை தூண்டும்.
89
நீர்ச்சத்து எல்லாமை :
உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லையென்றால் கூட தலைவலி ஏற்படும். நீங்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் இரவு தூங்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். இதன் காரணமாக காலையில் எழுந்ததும் தலைவலி உண்டாகும்.
99
பிற உடல்நல பிரச்சனைகள் :
சில சமயங்களில் உங்கள் உடலுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட உங்களது தூக்கம் பாதிக்கப்படும். இதனால் காலையில் எழும்பும்போதெல்லாம் தலைவலி ஏற்படும். நீங்கள் அடிக்கடி காலையில் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களது மூளையில் கட்டிகள் இருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்லுகின்றனர்.