வேலைக்கு செல்லும் பெண்கள் தனது வேலையை அலுப்பில்லாமல் புத்துணர்ச்சியுடன் செய்ய தினமும் காலையில் சில பானங்களை கட்டாயம் குடிக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
இன்றைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பெரும்பாலான பெண்கள் ஏதாவது வேலைக்கு செல்கிறார்கள். கட்டுமான பணி முதல் அலுவலகப் பணி வரை என தங்களால் முடிந்த பணிகளை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். இப்படி குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டும் பெண்கள் தங்களது உடல் நலத்தை குறித்து ஒருபோதும் அக்கறைக்காட்டுவதில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை தினமும் காலையில் குடித்து வந்தால் செய்யும் வேலையில் அலுப்பு தெரியாது. புத்துணர்ச்சியாக உணருவீர்கள். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
25
வெந்தய நீர் :
ஒரு கிளாஸில் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை கழுவி இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு காலை எழுந்ததும் அதை வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால் வெந்தயத்தையும் சாப்பிடலாம். வெந்தயத்தில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வயிற்று வலி, வயிற்றுப்புண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.
35
சியா விதை நீர் :
சியா விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. சியா விதையை இரவு தூங்கும் முன் ஊறவைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களது செரிமானம் அமைப்பு சீராக செயல்படவில்லை என்றாலோ, நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றாலோ, வரக்கொத்து மல்லிகை இரவு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சீராகும், தேவையில்லாத நச்சுக்ககும் வெளியேறும்.
55
இவற்றையும் குடிக்கலாம் :
இதுதவிர, இலவங்கப்பட்டை நீர், கருப்பு திராட்சை நீர், சீரகம் நீர் போன்றவற்றை ஊறவைத்து தினமும் குடிக்கலாம். உங்களுக்கு குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் இந்த வானங்களை பிடிக்க வேண்டாம். அது மட்டுமல்லாமல் இன்சுலின், தைராய்டு பிரச்சனை மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களும் மேலே சொன்ன பானங்களை குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.