Cyclospora Outbreak: ஒரு நாளைக்கு 30 முறை டாய்லெட் போகணுமா? குழந்தைகளை குறிவைக்கும் சைக்கிளோஸ்போரா!

Published : Jul 21, 2026, 11:01 AM IST

சைக்கிளோஸ்போரா என்ற ஒரு ஒட்டுண்ணியால் பரவும் நோய் இது. இந்த தொற்று ஏற்பட்டால், ஒரு நாளைக்கு 30 முறை வரை டாய்லெட் செல்ல வேண்டிய நிலைமை வருமாம்! இந்த நோய் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
சைக்கிளோஸ்போரா என்ற ஒட்டுண்ணி
அமெரிக்காவில் சைக்கிளோஸ்போரா என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த தொற்று ஏற்பட்ட ஒரு பெண், ஒரு நாளைக்கு சுமார் 30 முறை கழிவறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நோய், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது. இந்த ஆண்டு அமெரிக்காவில் சைக்கிளோஸ்போரா பாதிப்பு 2019-ஆம் ஆண்டின் எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது.
25
சாதாரண ஃபுட் பாய்சன்?
டாக்டர் சிரியக் ஏ.பி. பிலிப்ஸ் சொல்றபடி, சைக்கிளோஸ்போரா தொற்றை சாதாரண ஃபுட் பாய்சன்-னு மக்கள் தப்பா நெனச்சுக்கிறாங்க. ஃபுட் பாய்சன் ஒண்ணு ரெண்டு நாள்ல சரியாயிடும். ஆனா சைக்கிளோஸ்போரா பல வாரங்கள் வரை நீடிக்கும். சிகிச்சை எடுத்த பிறகும் கூட மீண்டும் வர வாய்ப்பிருக்கு.
35
வயிற்றுப்போக்கு, பசியின்மை, வேகமான எடை இழப்பு
இந்த தொற்றுக்கு முக்கிய அறிகுறிகளே, தண்ணியாகப் போகும் வயிற்றுப்போக்கு, பசியின்மை, வேகமான எடை இழப்பு, வயிற்று வலி, வயிறு உப்புசம், மற்றும் நாள்பட்ட சோர்வுதான். வாந்தி இருக்காது, மலத்தில் ரத்தம் அல்லது சீழ் இருக்காது. ஆனா, சாதாரண பிரச்சனைன்னு இதை கண்டுக்காம விட்டா ஆபத்துதான் என்கிறார் டாக்டர் பிலிப்ஸ்.
45
சாதாரண மலப் பரிசோதனையில் கண்டறிய முடியாது
ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ரத்தம் இல்லாத, நீரான வயிற்றுப்போக்கு இருந்தால், மருத்துவர்கள் சைக்கிளோஸ்போரா பரிசோதனையை பரிந்துரைப்பார்கள். இதை சாதாரண மலப் பரிசோதனையில் கண்டறிய முடியாது, சிறப்புப் பரிசோதனை தேவை. சைக்கிளோஸ்போரா கெயட்டனென்சிஸ் (Cyclospora cayetanensis) முதன்முதலில் 1979-ல் மனிதர்களிடம் கண்டறியப்பட்டு, 1994-ல் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டது. 2023-ல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) நடத்திய ஆய்வில், குறைந்தது மூன்று வெவ்வேறு வகைகள் மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவது தெரியவந்தது.
55
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கவனம் தேவை
இந்தியாவில் இந்த தொற்று பற்றி அதிக தகவல்கள் இல்லை. ஆனால், கொல்கத்தாவில் உள்ள ICMR-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் காலரா அண்ட் என்டெரிக் டிசீசஸ், 2025-ல் நடத்திய ஆய்வில், கிழக்கு இந்தியாவில் வயிற்றுப்போக்கு நோயாளிகளில் சுமார் 2% பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த எண்ணிக்கை 7% ஆக உயர்ந்தது. குறிப்பாக 5 முதல் 12 வயது குழந்தைகளிடம் இது அதிகமாகக் காணப்பட்டது. அசுத்தமான நீர், கழுவாத காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் மூலம் இந்த ஒட்டுண்ணி பரவுகிறது.
Read more Photos on
click me!

Recommended Stories