தயிர் அல்லது மோர் : வெயிலுக்கு எது பெஸ்ட்!
பாலில் இருந்து தான் தயிர் மோர் பெறப்படுகிறது. ஆனாலும் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியத்திற்கு நல்லது? என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பாலில் இருந்து தான் தயிர் மோர் பெறப்படுகிறது. ஆனாலும் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியத்திற்கு நல்லது? என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Curd vs Buttermilk Which is Healthier : தயிர் மற்றும் மோர் இவை இரண்டுமே பால் புளிக்க வைக்கப்பட்டு தான் பெறப்படுகிறது. இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை வெவ்வேறு முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் சுவை மற்றும் பயன்பாடுகள் வேறுபட்டவை. அவை இரண்டும் சுவையாகவும், உடலை புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. இவை இரண்டும் உற்பத்தி செய்யும் முறை முதல் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு வரை அதிக வேறுபாடுகள் உள்ளன. சரி, இப்போது இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தயிர் என்பது நன்மை பயக்கும் பாக்டீரியாவுடன் பாலை புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது. நொதித்தல் செயல்முறையில் இந்த பாக்டீரியா பாலில் இருக்கும் லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றது. இது பாலை கெட்டியாகி தயிரை கொடுக்கிறது மற்றும் சுவையை அளிக்கிறது. தயிர் புரோபயாடிக்குகள் அல்லது நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை இது குடல் ஆரோக்கியத்திற்கும், சிறந்த செரிமானத்திற்கும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தயிரில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. அவை செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தயிரில் இருக்கும் கல்சியம், எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றது. ஆய்வு ஒன்றில், தயிர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறுகின்றது. ஆனால், வெயில் காலத்தில் தயிரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை ஏற்படுத்தி விடும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோரில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க; இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்திடும்..!
மோர் என்பது அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பானம் ஆகும். தயிரிலிருந்து வெண்ணெய் பிழிந்த பிறகு கிடைப்பதுதான் மோர். மோரை தயாரிப்பதற்கு குறைந்த அல்லது முழு கொழுப்புள்ள பாலில் செயலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் சேர்க்கப்படுகின்றது. புது பாலை நன்கு காய்ச்சி, 12 மணி நேரம் புளிக்க வைக்கப்படுகிறது. பிறகு அது கெட்டியாகும். ஆனால் மோர் தயிர் மாதிரி இல்லாமல் பால் மாதிரி இருக்கும்.
இதையும் படிங்க: அடிக்குற வெயிலுக்கு தயிர் சூப்பர் உணவு!! ஆனா தினமும் சாப்பிட்டா நல்லதா?
மோரி கால்சியம், துத்தநாகம், புரதம், வைட்டமின் 2, வைட்டமின் பி 12 போன்றவை நிறைந்துள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தயிரை காட்டிலும் மோரில் குறைவாக கலோரிகள் உள்ளன. மோரில் இருக்கும் லாக்டிக் அமிலம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது அஜீரணம், அமிலத்தன்மை போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் புரோபயாடிக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும். மோரில் கொழுப்பு குறைவாகவே உள்ளதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாகும். மேலும் இதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது. மோர் குளிர்ச்சியான பானமாக கருதப்படுவதால் வெயில் காலத்தில் இதை குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
தயிரா அல்லது மோரா என்று பார்த்தால் அவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும். மோரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். காரணம் இதில் நீச்சத்து 90% உள்ளது. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் மோர் பிரபலமான பானங்களில் ஒன்றாகும்.