Weight Loss : தினமும் இரவில் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க! உடல் எடை தன்னால குறையும்

Published : Sep 30, 2025, 03:10 PM IST

உடல் எடை மற்றும் தொப்பையை வேகமாக குறைக்க இரவில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
Nighttime Weight Loss Foods

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்ற பல காரணங்களால் பலரும் பல விதமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் இரவில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். நீங்களும் அப்படித்தானா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள குறைந்த கலோரி உணவுகளை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் போதும். உடல் எடை தானாக குறைந்து விடும். அவை என்னென்ன உணவுகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

26
ராகி உணவுகள்

தற்போது பெரும்பாலான வீடுகளில் இரவு உணவாக இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் இருக்கும். ஆனால் அரிசி மாவில் செய்த இட்லி, தோசைக்கு மாற்றாகவும் மற்றும் கோதுமை சப்பத்துக்கு பதிலாக ராகி மாவில் இட்லி, தோசை அல்லது காய்கறிகள் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். ராகியில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அதுபோல இதில் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே எடை குறைக்க முயற்சிப்பவர்கள் இரவில் ராகியில் தோசை அல்லது சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

36
ஓட்ஸ் இட்லி

நீங்கள் இரவில் வழக்கமாக சாப்பிடும் அரிசி இட்லிக்கு பதிலாக ஓட்ஸில் இட்லி செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் ஓட்ஸிக் கலோரிகள் ரொம்பவே கம்மி. அதேசமயம் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகவே இது உங்களது எடை இழப்பு பயணத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

46
வெஜிடபிள் சூப்

நீங்கள் இரவில் மாவு உணவுகளை சாப்பிட விரும்பவில்லை என்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, அதேசமயம் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை தேர்வு செய்ய விரும்பினால் வெஜிடபிள் சூப் வகைகள் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இதில் வைட்டமின்கள் நார் சத்துக்கள் மினரல்கள் புரதங்கள் நிறைந்துள்ளன.

56
பாசிப்பயறு கிச்சடி

பாசிப்பருப்பில் புரதங்கள் அதிகமாகவும், கலோரிகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. முக்கியமாக இதில் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆகவே பாசிப்பயிறு கிச்சடி செய்து இரவு உணவாக சாப்பிடுங்கள்.

66
கொண்டைக்கடலை சாலட்

எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இரவு உணவுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். ஏனெனில் கொண்டைக்கடலையில் புரதங்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன அதே சமயம் கலோரிகள் மிக மிகக் குறைவு. வேக வைத்துக் கொண்ட கொண்டைக்கடலையுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories