பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், ஒரு சிலர் அதை குடிக்கவே கூடாது. அப்படி யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்க கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. இரத்த அழுத்தத்தை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது. உடல் எடையை குறைப்பவர்கள் கூட இதை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். என்னதான், ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை பீட்ரூட் ஜூஸ் வழங்கினாலும், ஒரு சிலர் அதை குடிக்கக் கூடாது தெரியுமா? ஆமாங்க, உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் யார் யாரென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
27
குறைந்த இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் குறைந்த இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் ஒருபோதும் குடிக்கவே கூடாது. மீறி குடித்தால் மயக்கம் தலை, சுற்றல் வரும்.
37
ஒவ்வாமை
சிலருக்கு பீட்ரூட் ஒவ்வாமையாக இருக்கலாம். அத்தகையவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சில சமயம் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக குடல் நோய் குறி உள்ளவர்களை பெரிதும் பாதிக்கும். ஆகவே இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை முதலில் கவனிக்கவும். எந்தவித பிரச்சனையும் இல்லையென்றால் தாராளமாக குடிக்கலாம்.
57
சர்க்கரை நோயாளிகள்
பீட்ரூட்டில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளதால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவே கூடாது.
67
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை இருந்தால் நீங்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவே கூடாது. ஏனெனில் இதில் அதிகளவு ஆக்சலேட்டுகள் இருக்கிறது. அது சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.
77
பெடூரியா தொற்று உள்ளவர்கள்
சிறுநீர் சிவப்பு நிறமாக மாறுவதுதான் பெடூரியா. பீட்ரூட் ஜூஸ் குடித்தால் சிலருக்கு சிறுநீர் சிவப்பு நிறமாக மாறுவதாக காணப்பட்டது. உங்களுக்கும் இது நேர்ந்தால் உடனே பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்.