Rice and Diabetes : சுகர் நோயாளிகள் அரிசி சோறு 'இப்படி' சாப்பிட்டுறதுதான் சரியான முறை! இனி அந்த தப்ப பண்ணாதீங்க!

Published : Sep 27, 2025, 04:36 PM IST

சுகர் நோயாளிகள் அரிசி சோறு சாப்பிட்டதும் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும். அதை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

PREV
17

டைப்-2 சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் என்ற ஹார்மோன் போதுமான அளவில் உற்பத்தியாவதில்லை. அதென்ன இன்சுலின்? நமக்கு தேவைப்படும் ஆற்றலுக்காக குளுக்கோஸை செல்களுக்குள் அனுப்ப ஆதரவாக செயல்படுவது இன்சுலின் தான். இது சுரக்காவிட்டால் குளுக்கோஸ் இரத்தத்தில் அப்படியே தங்கிவிடும். அதனால்தான் இரத்த சர்க்ரை அளவை உடனடியாக அதிகரிக்கிறது. ஆகவே தான் இந்த வகை சர்க்கரை நோயாளிகளை மருத்துவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த சொல்கிறார்கள்.

27

இந்த நோய் உள்ளவர்கள் பல உணவுகளை தவிர்க்க வேண்டும். சில உணவுகளை அளவாக உண்ண வேண்டும். அதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளும் அடங்கும். இட்லி, தோசை, சோறு போன்ற அரிசியில் இருந்து வரும் உணவுகளை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஆனால் சில விஷயங்களைப் பின்பற்றினால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமலே சோறு சாப்பிட முடியும். அதை இங்கு காணலாம்.

37

அரிசி நிறத்தை கவனித்து சாப்பிட வேண்டும். அரிசியின் நிறம் சற்று அடர்த்தியாக இருந்தால், அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவு. உதாரணமாக, வெள்ளை அரிசியைவிட கைக்குத்தல் அரிசியில் சர்க்கரை உயரும் திறன் கொஞ்சம் குறைவாக காணப்படும். கருப்பு அரிசியில் அதைவிட குறைவாக காணப்படும். வெவ்வேறு வகையான அரிசிகளை சமைத்து சாப்பிடுங்கள்.

47

அரிசியை புழுங்க வைத்து சாப்பிட்டால் அது நல்லது. அதனால் தான் ரேஷன் அரிசியில் ஒப்பீட்டளவில் இரத்த சர்க்கரை அளவு குறைவாக உயருகிறது. புழுங்கல் அரிசியை விட பச்சரிசி உண்பது சுகரை கூட்டிவிடும். பச்சரிசி மேல் இருக்கும் லேயர் நீக்கப்படுவதே அதற்கு காரணம்.

57

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சோறு சாப்பிடும்போது முதலாவதாக நிறைய காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அங்கு சோறு என்றால் 2 பங்கு காய்கறிகள். பின்னர் புரதம், நார்ச்சத்து உள்ள உணவுகளையும் உண்ண வேண்டும்.

67

சோறு அளவாக உண்ண வேண்டும். புதியதாக சமைத்த சோறை விட பழைய சோற்றை சாப்பிடுவது நல்லது. நீளமான அரிசியை தேர்ந்தெடுப்பது சிறந்தது. மற்ற அரிசியை விட நீளமாக உள்ள அரிசியில் இரத்த சர்க்கரை அளவு உயரும் தன்மை குறைவாகவே உள்ளது. பாசுமதி அரிசியில் சமைத்து சாப்பிடலாம். குருணையாக உள்ள அரிசியில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்குமாம்.

77

இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை முறையாக பின்பற்றினால் சோறு சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவு உடனடியாக உயர்வதை தடுக்கலாம். எப்போது நீங்கள் சோறு சாப்பிட்டாலும் அதனுடன் நார்ச்சத்து, புரதச்சத்து இருக்கும் உணவுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே சிறந்தது. சாப்பிட்டு முடித்த பின்னர் பத்து முதல் 15 நிமிடங்கள் குறுநடை போடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதை தடுக்க உதவியாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories