கிட்னி பிரச்சனையே வராம இருக்கனுமா? இந்த '1' காய் சாப்பிட்டா போதும்!

Published : Sep 29, 2025, 01:05 PM IST

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் கிட்னியை சுத்தப்படுத்துவது வரை இந்த ஒரு காய் உதவுகிறது. அது என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Radish Health Benefits

முள்ளங்கி குளிர்கால பயிர் என்று அழைக்கப்பட்டாலும் எல்லா பருவ காலத்திலும் இது கிடைக்கும் காயாகும். முள்ளங்கியில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக செயல்படுகிறது. ஆனாலும் முள்ளங்கியின் சுவை மற்றும் கடுமையான வாசனை காரணமாக பலர் அதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனாலும் உணவில் கண்டிப்பாக முள்ளங்கியை சேர்க்க வேண்டுமென்று சொல்லப்படுகின்றது. இந்த பதிவில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

27
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

முள்ளங்கியில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக சளி, இருமல் போன்ற பருவ கால தொற்றுகள் வருவதை தடுக்க முள்ளங்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே நீங்கள் அடிக்கடி நோய்வாய் பட்டாலோ அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவே குறைவாக இருந்தால் முள்ளங்கியை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

37
சிறுநீரகம் மற்றும் கல்லீரலை நச்சு நீக்கம் செய்யும் :

முள்ளங்கியில் இருக்கும் சில பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் நச்சு நீக்கும் செயல்முறையை தீவிரப்படுத்தும். இந்த இரண்டு உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.

47
குடல் ஆரோக்கியத்திற்கு

முள்ளங்கியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாயு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம். வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக முள்ளங்கியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

57
எடையை குறைக்கும்

எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முள்ளங்கி சிறந்த தேர்வாகும். காரணம் இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது. இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கும். மேலும் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.

67
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது இரத்த நாளங்களை சீராக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. ஆகவே உங்களது உணவில் தொடர்ந்து முள்ளங்கியை சேர்த்து வந்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். மேலும் இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

77
முள்ளங்கியை உணவில் சேர்ப்பது எப்படி?

- முள்ளங்கியின் தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கி அதை சாலட்டுகளில் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

- முள்ளங்கியை துருவி பரோட்டா மாவில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

- முள்ளங்கியை பருப்பு மற்றும் பிற காய்கறிகளுடன் சேர்த்து பருப்பு கறியாக சாப்பிடலாம்.

- முள்ளங்கியை சூப்பாக கூட செய்து சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு: முள்ளங்கியை வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடவே கூடாது. அது போல இரவில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories