உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுபோல தசை வலிமையை அதிகரிக்க எடை தூக்கும் பயிற்சியை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் செய்யலாம். ஆமாங்க, எடைத் தூக்கும் பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆனால் சில பெண்கள் தான் எடைத் தூக்கும் பயிற்சியை செய்கிறார்கள். உண்மையில், பெண்கள் எடை தூக்கும் பயிற்சியை செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
27
தசை வலிமையை மேம்படுத்தும் :
எடை தூக்கு பயிற்சியை தினமும் செய்து வந்தால் தசைகள் வலுவாக இருக்கும். தசைகள் வலுவாக இருந்தால் எல்லா வேலைகளையும் சுலபமாக செய்ய முடியும். எனவே பெண்கள் எடையை தூக்கும் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் அவர்களுக்கு வேண்டிய வேலைகளை அவர்களால் செய்ய முடியும்.
37
மன அழுத்தம் நீங்கும் :
எடை தூக்கும் பயிற்சியை பெண்கள் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மனநிலை மேம்படும். மேலும் மன சோர்வு, பதட்டம் கவலைகள் போன்றவை குறைந்து மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பெண்கள் எடை தூக்கும் பயிற்சியை செய்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம் சீராகும். இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். மேலும் உடலில் உள்ள இரத்த சர்க்கரையை சீராக வைக்கும். இதனால் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
57
வலி நிவாரணம் :
தற்போது 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பலரும் மூட்டு வலி, முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் உடல் உழைப்பு இல்லாமைதான். ஆனால் எடை தூக்கும் பயிற்சியை செய்து வந்தால் தசைகள் வலிமையாகும். மூட்டு வலி முதுகு வலி பிரச்சனைகள் சரியாகும்.
67
எடை இழப்பை ஊக்குவிக்கும் :
பெண்கள் எடையை குறைக்க கார்டியோ பயிற்சி மட்டுமல்ல எடை தூக்கும் பயிற்சியையும் நம்பலாம். ஆம் இந்த பயிற்சியானது அதிக கலரிகளை மிக வேகமாக எரிக்கும். எனவே, எடையை வேகமாக குறைக்க விரும்பும் பெண்கள் எடை தூக்கும் பயிற்சியை செய்யலாம்.
77
எவ்வளவு எடை தூக்கலாம்?
எடை தூக்கும் பயிற்சியை முதன் முதலில் செய்யப் போகிறீர்கள் என்றால் முதலில் சிறிய எடை அளவிலிருந்து தொடங்குவது நல்லது. பிறகு மெதுவாக அடுத்தடுத்து எடை தூக்குவதை அதிகரிக்கலாம். நீங்கள் எடை தூக்கும் பயிற்சியை செய்யும்போது எடையானது உங்கள் உடலுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.