Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!

Published : Dec 20, 2025, 03:49 PM IST

ஒல்லியாக இருக்கும் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க தேங்காய் பால் எப்படியெல்லாம் உதவுகிறது என்று இங்கு காணலாம்.

PREV
14
Coconut Milk for Kids

பொதுவாக உடல் எடையை குறைப்பதை விட அதை அதிகரிப்பது ரொம்பவே ஈஸி என்று சொல்லலாம். ஆனால் இது எல்லாருக்கும் பொருந்தாது. ஆமாங்க, சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையை கூடவே கூடாது. எந்த உணவுகள் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக சில குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். அப்படி உங்க குழந்தையும் ஒல்லியாகவும், நோஞ்சானா இருக்காங்களா? அப்படியானால் உங்கள் குழந்தையின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்தும், ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்கவும் தேங்காய் பால் உதவும். இந்த பதிவில் ஒல்லியாக இருக்கும் குழந்தை கொழு கொழுவென மாற தேங்காய் பால் எப்படி உதவுகிறது? அதை எப்படி கொடுக்க வேண்டும்? அதன் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

24
குழந்தைக்கு தேங்காய் பால் எப்படி கொடுக்கணும்?

அரை முடி தேங்காயை துருவி அதனுடன் ஏலக்காய் மற்றும் பொடித்த கருப்பட்டி சேர்த்து அரைத்து அதை வடிகட்டி தினமும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தையின் எடை 30 நாட்களில் அதிகரித்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

34
தேங்காய் பால் நன்மைகள் :

1. ஜீரணம் :

தேங்காய் பால் குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகவும் பெரிதும் உதவுகிறது.

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

தேங்காய் பாலில் மெக்னீசியம், இரும்புச்சத்து, தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

44
3. ஆற்றல் அதிகரிக்கும் :

குழந்தைக்கு தினமும் தேங்காய் பால் கொடுத்தால் அவர்களது உடலில் ஆற்றல் அதிகரிக்கும். இது தவிர வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்கவும் இது உதவும்.

4. பிற உடல் நலப் பிரச்சினைகள் :

தேங்காய் பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொழுப்புகள் நிறைந்திருப்பதால் வேறு எந்த உடலில் பிரச்சனைகளும் குழந்தைகளுக்கு வராது.

Read more Photos on
click me!

Recommended Stories