Rice Flour On Face : சரும சுருக்கம் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் நீக்கும் 'அரிசி மாவு' இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க

Published : Dec 20, 2025, 02:55 PM IST

சுருக்கங்கள் இல்லாமல் முகத்தை இளமையாக வைக்க என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அரிசி மாவில் அழகு குறிப்புகள் இதோ.

PREV
18
Rice Flour On Face

வீட்டில் இருக்கும் பொருளை வைத்து முகத்தை அழகாக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரிசி மாவு ஒரு வரபிரசாதம் ஆகும். முகம் பளபளப்பாக வைப்பது முதல் முக சுருக்கங்களை நீங்கி இளமையாக வைப்பது வரை முகத்திற்கு அரிசி மாவு சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. இப்போது முகத்திற்கு அரிசி மாவு பயன்படுத்தும் சில வழிகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

28
அரிசி மாவில் ஸ்கிரப்பர் :

இதற்கு 1 ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்து அதை கொண்டு முகத்தில் ஸ்க்ரப் செய்தால் முகத்திலிருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு, அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கும். ஸ்க்ரப் செய்தும் போது முகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். மெதுவாக் செய்தால் போதும். அதுவும் 2-3 நிமிடங்கள் மட்டுமே. ஸ்கிரப்பர் செய்து முடித்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இப்படி செய்தால் முகம் பளிச்சினு இருக்கும்.

38
அரிசி மாவும் வெள்ளரி சாறும்..

ஒரு ஸ்பூன் அரிசி மாவில் ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறு, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை சுத்தம் செய்யும் மற்றும் பருக்களை நீக்கும்.

48
அரிசி மாவும் சர்க்கரையும்..

ஒரு ஸ்பூன் அரிசி மாவில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அதை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். அதன் பிறகு ஐஸ்கட்டி கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் மூக்கை சுற்றி இருக்கும் அழுக்குகள் நீங்கும். மேலும் முகமும் ஜொலி ஜொலிக்கும்.

58
அரிசிமாவும் தேனும்..

ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் ரெண்டு ஸ்பூன் தேன் கலந்து அதை கழுத்து மற்றும் மூக்குப்பகுதிகளில் ஸ்க்ரப் செய்து வந்தால் அழுக்குகள் நீங்கி சருமம் பளபளப்புடன் இருக்கும்.

68
அரிசி மாவும் தயிரும்..

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அரிசி மாவு , தயிர் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை கழுவவும். இந்த பேக் முக சுருக்கத்தை போக்கி சருமத்தை இறுக்கமாக்கி முகத்தை இளமையாக வைக்கும். மற்றும் முகத்திற்கு பொலிவைத் தரும். மேலும் சருமத்தை மிருதுவாக்கும்.

78
அரிசி மாவில் பேசியல்!

நீங்கள் வீட்டிலேயே உங்களது முகத்தை ஃபேஷியல் செய்ய விரும்பினால் அரிசி மாவு உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், சிறிதளவு தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு மெல்லமாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். அடுத்து ஐஸ் க்யூபை முகத்தில் தடவவும். இந்த பேசியல் உங்களது முகத்தை பளபளப்பாக மாற்றும்.

88
மேக்கப்பை கலைக்க அரிசி மாவு!

பகலில் போட்ட மேக்கப் இரவில் தூங்கும் முன் கலைக்க அரிசி மாவு பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து நன்கு குழைத்து அதை முகத்தில் தடவி 5 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பின் மெதுவாக தேய்த்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் மேக்கப் முற்றிலும் நீங்கிவிடும். முகமும் பளிச்சுனு மின்னும்.

Read more Photos on
click me!

Recommended Stories