Morning Habits For Belly Fat : நீண்ட ஆயுளுக்கு இது 'முக்கியம்' ஆரோக்கியமில்லாத தொப்பையை குறைக்க 'இதை' செய்தால் போதும்!!

Published : Dec 20, 2025, 05:40 PM IST

அசிங்கமாக தொங்கும் வயிற்று தொப்பையை குறைக்க நீங்கள் பல முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை தினமும் செய்து வந்தால் தொப்பை ஜெட் வேகத்தில் குறைய ஆரம்பிக்கும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

PREV
18
ஒரே நேரத்தில் தூங்கி எழுதல்

தினமும் ஒரே நேரத்தில் எழ முயற்சி செய்யுங்கள். இது உடலின் கடிகாரத்தை சீராக்கி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். கார்டிசோல், இன்சுலின் போன்ற ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்.

28
சூடான நீரில் எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் நாளைத் தொடங்குங்கள். இது அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்கும். சரியான நீரேற்றம் வளர்சிதை மாற்றத்தை ஆதரித்து, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும்.

38
உடற்பயிற்சி

தினமும் காலையில் 30 நிமிடங்கள் வாக்கிங் சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்து வந்தால் நாள் முழுவதும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறன் மற்றும் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது.

48
காலை உணவை தவிக்காதே!

காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடையை அதிகரிக்கும். இது பின்னர் அதிகமாகச் சாப்பிட அல்லது சர்க்கரை மீது ஆசை கொள்ள வழிவகுக்கும். ஆகையால் காலையில் ஏதாவது குறிப்பாக ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

58
மன அழுத்தம்

மன அழுத்தம் கார்டிசோல் அளவை அதிகரித்து தொப்பைக்கு வழிவகுக்கும். 5-10 நிமிட காலை தியானம் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து, உணவு முறையை கட்டுப்படுத்தும்.

68
தேநீர், காபி

சர்க்கரை சேர்த்த தேநீர், காபி, பிஸ்கட் சாப்பிடுவது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கும். இது மதிய உணவின் போது அதிகமாக சாப்பிட வழிவகுக்கும்.

78
சர்க்கரை

சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது ஆரோக்கியமான நாளுக்கு வழிவகுக்கும் மற்றும் பசியை சீராக்க உதவும். சர்க்கரையைக் குறைப்பது தொப்பையைக் குறைப்பதோடு நேரடியாக தொடர்புடையது.

88
காலை சூரிய ஒளி

காலை வெயில் படுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது வைட்டமின் டி உற்பத்தியை ஆதரிக்கிறது. குறைந்த வைட்டமின் டி அளவு தொப்பையுடன் தொடர்புடையது.

Read more Photos on
click me!

Recommended Stories