அன்றாட வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களான உணவு, உடற்பயிற்சி, தூக்கம், ஓய்வு என எந்தவொரு ஒழுங்கும் இல்லாமல் நடந்தால், அது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம், சமூக வாழ்க்கை, வேலை மற்றும் உறவுகளை கண்டிப்பாக பாதிக்கும். எனவே முடிந்தவரை எல்லாவற்றையும் சரியாக மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் இரவில் சரியாக தூங்க முடியும், அதிகாலையில் வேகமாக எழ முடியும். இதுசிலருக்கு மிகடும் கடினமாக தோன்றலாம். ஆனால் நீங்கள் அதிகாலையில் எழத் தொடங்கிவிட்டால், உங்களுக்கு எண்ணிலடங்காத நன்மைகள் கிடைக்கும்.