666 Walking Rules And Benefits : நடைப்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய மிதமான பயிற்சியாகும். 6-6-6 நடைப்பயிற்சி விதி என்பது அடுத்தக்கட்ட நகர்வு எனலாம். ஒரே மாதிரியாக தினமும் நடைபயிற்சி செய்பவர்கள் இந்த விதியை பின்பற்றும்போது கூடுதல் பலன்களை பெற முடியும். நீரிழிவு நோய், இதயம் சார்ந்த நோய்கள் உண்டாகும் ஆபத்து குறைய 6-6-6 வாக்கிங் விதி உதவுகிறது.
25
6-6-6 வாக்கிங் விதி:
காலை 6 மணி, மாலை 6 மணி ஆகிய இருவேளைகளிலும் நடைபயிற்சி செல்லும் முன்பும், பின்பும் 6 நிமிடம் வார்ம்-அப், கூல்-டவுன் பயிற்சிகளை செய்ய வேண்டும். நடக்கும் முன்பு வார்ம் அப், நடந்த பின்னர் கூல் டவுன் பயிற்சிகள் செய்வது உடலை சமநிலையில் வைக்கவும், தேவையில்லாத சுளுக்கு, காயங்களை தவிர்க்கவும் உதவும். இதைப் பின்பற்றுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. காலையில் நடப்பதால் வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு இரத்த ஓட்டத்தை மேம்படுகிறது. மாலை நேர நடைப்பயிற்சி மனதையும், உடலையும் அமைதியாக்கும்.
தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் 6 மணிக்கு நடப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் இந்த நடைபயிற்சி உதவும்.
தினமும் நடைப்பயிற்சி செய்வது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதால் இதய கோளாறுகளை தடுக்க முடியும்.
கீழ் உடல் வலிமை;
நம்முடைய ஒட்டுமொத்த உடலையும் தாங்குவதே கீழ் உடல் தான். அதை வலுப்படுத்த நடைப்பயிற்சி உதவுகிறது. அதிலும் 6-6-6 வாக்கிங் விதியை பின்பற்றினால் விரைவில் பலன்களை கண் கூடாக பார்க்கலாம்.
55
மனத் தெளிவு:
நடைப்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் படிப்படியாக குறைகிறது. மனத் தெளிவை மேம்படுத்த நடைபயிற்சி உதவுகிறது.
நெகிழ்வுத்தன்மை:
தினமும் வார்ம் அப், கூல்-டவுன் பயிற்சிகள் செய்வதால் உடல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். கூல்-டவுன் பயிற்சிகள் செய்வதால் தசையில் உள்ள அசௌகரியம் குறைந்துவிடுகிறது. தசைகள் விறைப்பு நீங்கி தளர்வாக இருக்கும்.
குறிப்பு: ஏற்கனவே மருத்துவ சிசிக்கையின் கீழ் இருப்பவர்கள் கவனமாக பயிற்சி செய்ய வேண்டும். எந்த புதிய உடற்பயிற்சியையும் பின்பற்றும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.