வாயில் வைத்ததும் கரையும் சுவையான மைசூர் பாக் சரியான முறையில் செய்வது எப்படி?

ஊர் பெயருடன் புகழ்பெற்று விளங்கும் உணவு வகைகளில் ஒன்ற மைசூர் பாக். மைசூரில் இது ஃபேமல் ஆனதோ இல்லையோ. ஆனால் இதன் சுவையால் உலகம் முழுவதும் மைசூரின் பெயர் புகழ்பெற்று விட்டது. தென்னிந்திய இனிப்பு வகைகளில் மிக முக்கியமான இடம்பிடிக்கு மைசூர் பாக்கை சரியான பதத்தில் எப்படி செய்வது என வாங்க தெரிந்த கொள்ளலாம்.

making a perfect mysore pak karnatakas most celebrated sweet
மைசூர் பாக் :

மைசூர் பாக் – கர்நாடகாவின் புகழ்பெற்ற இனிப்பு. வாயில் வைத்ததும் கரையும், நெய் மணத்துடனான சாஃப்டான மைசூர் பாக், சற்று கடினமான தன்மை கொண்டதாக இருக்கும் மைசூர் பாக் என இதில் பல வகைகள் உண்டு. ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக் கூடியது பாரம்பரியமாக கர்நாடகாவில் செய்யக் கூடிய தனிச்சுவையான மென்மையான மைசூர் பாக் தான். இதை சரியான பக்குவத்தில் தயார் செய்யா விட்டால் கடினமாகி விடும். இதை எப்படி வீட்டிலேயே செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம். 
 

மைசூர் பாக் வரலாறு :

மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் அம்மா நாயுடு என்ற தலைசிறந்த பக்ஷண தயாரிப்பாளர், புதிய இனிப்பு ஒன்றை உருவாக்கி மன்னனுக்கு பரிமாறினார். நெய், கடலைமாவு, சர்க்கரை ஆகிய மூன்று பொருட்களின் சரியான ஒத்துழைப்பால் உருவான இந்த இனிப்பு, மன்னரின் பாராட்டைப் பெற்று "மைசூர் பாக்" என்ற பெயரை பெற்றது.
 


சிறந்த மைசூர் பாக் தயாரிப்பதற்கான ரகசியம் : தேவையான பொருட்கள்:

கடலைமாவு – 1 கப்
நெய் (தூய உருக்கப்பட்ட நெய்) – 1 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு இஸ்து...பரோட்டாவிற்கு ஏற்ற செம சைடிஷ்

மைசூர் பாக் தயார் செய்வது எப்படி?

- ஒரு அகன்ற கடாயில் நெய்யைச் சற்று சூடாக்கி, கடலைமாவை மெல்லிய தீயில் வறுக்க வேண்டும். இதனால், மாவின் பச்சை வாசனை நீங்கி, மென்மையான நறுமணம் வரும்.
- மாவை தனியாக வைத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பி பதம் வந்தால் சரியான நிலை.
- பாகு தன்மை மிக முக்கியம். இது சரியான நிலைக்கு வராவிட்டால், மைசூர் பாக் உதிரியாக இருக்கும் அல்லது கடினமாகிவிடும்.
- சர்க்கரை பாகு வெந்த பிறகு, வறுத்த கடலைமாவை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.
- கட்டிப்படாமல் இருக்க, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தீயை மிதமான அளவில் வைத்து கிளற வேண்டும்.
- மெல்ல மெல்ல சூடான நெய்யை ஊற்றி, கலவை மென்மையாக மாறும் வரை கிளற வேண்டும்.
- கடைசியில், கலவை கடாயை விட்டுத் தனியாக வரும் அளவிற்கு வரும்போது, வெட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.
- ஒரு தட்டு அல்லது பட்டர்ஷீட் பேப்பரில் இந்த கலவையை பரப்பி, சற்றே குளிர்ந்தவுடன் தேவையான அளவிலா துண்டுகளாக வெட்டி விடலாம்.

மைசூர் பாக் – இருவேறு வகைகள் :

"Soft Mysore Pak" – கடைகளில் கிடைக்கும் மெல்லிய, உடனே கரையும் பதத்துடன்.
"Crispy Mysore Pak" – சிறிது அதிகமாக வேகவைத்து, சிறிதளவு கடுக்கும் அளவிலான வடிவம்.
 

மைசூர் பாக் தனிச்சிறப்பு :

- வாயில் போடும் போது நெய்யின் நறுமணத்துடன் கரையும் உணர்வு.
- ஒவ்வொரு பொருட்கும் சரியான அளவில் சேர்த்தால்தான் சரியான மைசூர் பாகு சுவை கிடைக்கும்.
- தேவையான கலோரியும் சுகமான சுவையும் ஒருங்கே தரும்.

சிறந்த மைசூர் பாக் செய்ய சில குறிப்புகள்:

- மைசூர் பாக் செய்யும் போது பொறுமையுடன் தொடர்ந்து கிளறுங்கள், இல்லையெனில் கட்டிபட்டு விடும்.
- சர்க்கரை பாகு சூட்சுமம் மிக முக்கியம் . குறைந்ததும், அதிகமானதும் கெட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.
- உயர்தர நெய் பயன்படுத்துங்கள் . உண்மையான நெய்யின் மணம் தான் சிறந்த மைசூர் பாக் தரும்.
- மிகவும் சூடான நிலையில் வெட்ட வேண்டாம் . சிறிதளவு குளிர்ந்த பிறகு மட்டும் துண்டுகளாக வெட்டலாம்.

மைசூர் பாக் ஒரு இனிப்பு மட்டுமல்ல, அது கர்நாடகாவின் உணவுப் பாரம்பரியத்தின் அடையாளம்! இது தீபாவளி, கல்யாணங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என அனைத்து சந்தர்ப்பங்களிலும் பரிமாறப்படும் அழகு மிக்க இனிப்பு. மைசூர் நகரில் உருவான இந்த இனிப்பு, இன்று இந்தியா முழுவதும் பிரபலமானதும், உலகம் எங்கும் பரவியதும் பெருமைக்குரியது.

Latest Videos

click me!