டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?

Published : Feb 23, 2026, 04:23 PM IST

எடை குறைக்க வெள்ளை அரிசி நல்லதா அல்லது பழுப்பு அரிசி நல்லதா? இரண்டின் கலோரி, நார்ச்சத்து மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள வித்தியாசங்களை அறிந்து கொள்ளுங்கள்.

PREV
15
வெள்ளை அரிசியா? பழுப்பு அரிசியா?

நம் நாட்டில் உணவு என்றால் அரிசி தவிர்க்க முடியாத ஒன்று. வெள்ளை அரிசியும், பிரௌன் அரிசி என்று அழகைப்படும் பழுப்பு அரிசியும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. எடை குறைக்க பழுப்பு அரிசி சிறந்தது என பலர் கூறினாலும் உண்மை என்ன? என்பது பலருக்கும் தெரிவதில்லை.

25
பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி முழு தானியம். இது அதிகமாக பாலிஷ் செய்யப்படாததால் நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. வெள்ளை அரிசி அதிகமாக பாலிஷ் செய்யப்பட்டதால் வெளிப்புற நார்ச்சத்து நீக்கப்படுகிறது.

35
இரத்த சர்க்கரை அளவு

கலோரி அளவு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

45
வெள்ளை அரிசி

வெள்ளை அரிசி உடனடி ஆற்றலை தரும். அளவாக சாப்பிட்டால் அது தீங்கு இல்லை. காய்கறி, பருப்பு, புரதம் சேர்த்து சாப்பிட்டால் எடை குறைக்கும் திட்டத்திலும் சேர்க்கலாம்.

55
எடை குறைக்கும் உணவு

எடை குறைப்பதில் முக்கிய முழு உணவு முறை மற்றும் உடற்பயிற்சி. அரிசி வகை மட்டும் மாற்றினால் பலன் கிடைக்காது. இரண்டையும் மாறி மாறி சாப்பிடுவது சிறந்த அணுகுமுறை என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories