பொன்னாங்கன்னி கீரை கூட்டு ரெசிபி
முதலில் சிறிதளவு சிறுபருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். கீரையை நன்கு கழுவி தண்ணீரை உலர விட்டு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து அதனுடன் கீரையை போட்டு வதக்க வேண்டும். கீரை வெந்து வரும்போது அதனுடன் வேகவைத்த சிறுபருப்பு கலவையை கலந்து, இறுதியில் உப்பு சேர்த்தால் சுவையான பொன்னாங்கன்னி கீரை ரெடி.