ஜீரணம் ஆகாம வயிற்றில் கேஸ், எரிச்சல்.. சாப்பிடும் போதே என்ன பண்ணனும் தெரியுமா?

First Published | Feb 27, 2023, 11:13 AM IST

ஜீரணிக்க கடினமாக இருக்கும் பொதுவான உணவுகளை இங்கு காணலாம். 

சில உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரமாகும், கடினமாகவும் இருக்கும். பாஸ்தா, பீட்சா, அரிசி, சிப்ஸ், டோனட்ஸ் ஆகியவை கார்போஹைட்ரேட் அடர்த்தியான உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் இவை உங்கள் செரிமானத்திற்கு அதிக நேரத்தை எடுத்து கொள்ளும். இது மாதிரி செரிமானத்தை சிக்கலாக்கும் உணவுகளை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என இங்கு தெரிந்து கொள்ளலாம். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் மோசமானது. இவையெல்லாம் பூஜ்ஜிய ஊட்டச்சத்து கொண்டவை. இவை சரியாக செரிமானம் ஆவதும் இல்லை. இதில் காணப்படும் தேவையற்ற சேர்மானங்கள் குடலையும் எரிச்சலூட்டும். வயிற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை வாயு, வீக்கம் மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. 

Tap to resize

வறுத்த உணவுகள்.. 

வறுத்த உணவுகள் செரிமான செயல்முறையை முற்றிலும் பாதிக்கின்றன. அவை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நார்ச்சத்து இல்லாததால் செரிக்கவும் கடினமாகவும் இருக்கும். காரமான உணவுகள் செரிமான அமைப்பைத் தூண்ட உதவுகின்றன. ஆனால் அதுவே அதிக அளவில் சாப்பிட்டால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வாயு, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை எதிர்விளைவு, வயிற்று வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

இனிப்பும், ஆல்கஹாலும்.!

செயற்கை இனிப்புகள் வயிற்றுக்குள் எரிச்சலை உண்டாக்கும். சூயிங்கம் மற்றும் டயட் உணவுகளில் சேர்க்கப்படும், சர்பிடால், மிகவும் பொதுவான இனிப்பு. இவை வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் செரிமானம் உட்பட பல நோய்களை ஏற்படுகின்றன. மிதமான அளவு ஆல்கஹால் கூட நெஞ்செரிச்சல், அசிட்டிட்டி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. 

காபி குடிப்பதை குறைங்க..!

காபி காஸ்ட்ரின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இரைப்பை அமில சுரப்பை ஏற்படுத்துகிறது. இவை அதிக அளவில் குடித்தால் செரிமான பிரச்சனைகள் வரும். 

சோளம் 

சோளத்தில் புரதம் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சோளம் செல்லுலோஸால் ஆனது. நம் மனித உடலில் அதை உடைக்க சரியான நொதிகள் கிடையாது. அதனால் செரிமானம் சிக்கலாகிறது. 

இதையும் படிங்க: வாஸ்துபடி வீட்டுல வன்னி மரம் வெச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா? யாருக்கும் சொல்லாதீங்க..!

மிளகுக்கீரை 

இது புத்துணர்ச்சியையும் சுவையையும் தருகிறது என்றாலும், அதிக அளவில் மிளகுக்கீரை உட்கொள்வது கடுமையான நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இது உங்கள் தசைகளை தளர்த்துகிறது. இதனால் உணவு உங்கள் உணவுக்குழாயில் மீண்டும் நகரும். 

பால் உணவுப்பொருள்கள் 

பால் பொருட்களில் லாக்டோஸ் இருப்பதால் ஜீரணிக்க கடினமாக உள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத பலருக்கு கடுமையான வாயு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளாமல் தவிர்ப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 

இதையும் படிங்க: கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியம்.. மனதார வேண்டி நாம் படைத்ததை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது?

Latest Videos

click me!