தினமும் ஒரு கப் தயிர்.. அட நீண்ட நாட்கள் வாழ சுலபமான டிப்ஸ் கூட இருக்கா? சூப்பர் மந்திரங்கள் இதோ...

First Published | Feb 21, 2023, 5:53 PM IST

Nutrition: ஆரோக்கியமாக வாழ சுலபமான பத்து வழிகள்... 

நல்ல ஊட்டச்சத்து தான் நம் ஆரோக்கியத்தின் அடித்தளம். உங்கள் உணவு, வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்துவது நோய் வரும் முன் காத்து கொள்ள உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி நீண்ட ஆயுள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில குறிப்புகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். 

1. அனைத்து வகையான பழங்கள், காய்கறிகளை எப்போதும் தவறாமல் உண்ண வேண்டும்.

2. எந்த உணவு எடுத்து கொண்டாலும் ஒரு கிண்ணம் சாலட் எடுத்து கொள்ள வேண்டும். 

3. பிரவுன் அரிசி, கொண்டை கடலை, மொச்சை பயறு, பாசி பயறு போன்ற நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பருப்புகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்

Tap to resize

4. பாதாம், முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை தினமும் சிற்றுண்டியாக சாப்பிடுங்கள்.

5. தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர், 1 கிளாஸ் காய்கறி ஜூஸ் அல்லது சூப் அருந்தவும். 

6. தினமும் ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிர் உண்ணுங்கள். வடமாநிலங்களில் மதிய உணவுக்கு பின் தயிர் உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். 

இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?

7. வளர்சிதை மாற்றக் கோளாறுகள், ஜிங்க், குரோமியம், வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்க சர்க்கரை உண்பதை குறையுங்கள்.

8. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வெண்ணெய், வறுத்த உணவுகள், துரித உணவுகளை தவிருங்கள். PUFA அடிப்படையிலான எண்ணெயை தவிர்க்கவும். 

9. வாரத்தில் 5 நாட்களாவது 30 முதல் 40 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்யுங்கள். மிதமான உடற்பயிற்சியும் செய்யலாம். 

10. எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல தூக்கத்தை கடைபிடியுங்கள். நல்ல தூக்கம் இல்லாமல் போனால் பல உடல்நலக் கோளாறுகள் வரக் கூடும். 

இதையும் படிங்க: PCOS.. இந்த பிரச்சனை இருக்க பெண்கள் பால் அருந்த கூடாதா? நீர்க்கட்டிகள் பிரச்சனை கட்டுக்குள் வர என்ன செய்யனும்

Latest Videos

click me!