முட்டையால் இதயத்துக்கு கேடு வருமா? தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா?

First Published | Feb 18, 2023, 3:52 PM IST

இதய ஆரோக்கியத்திற்கு முட்டை நல்லது. உடல் எடை குறையவும் அது எப்படி உதவுகிறது என தெரிந்துகொள்ளுங்கள். 

பெரும்பாலானவர்களுக்கு பிடித்த காலை உணவு முட்டைதான். இது சமைப்பதற்கு எளிமையானது. இதில் உயர்தர புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் செய்த ஆய்வுகள் முட்டையை மஞ்சள் கருவுடன் உண்பது இதய ஆரோக்கியம் கெடுக்கும் என்றது. ஆனால் இதை மறுத்து அடுத்தாக பல ஆய்வு முடிவுகள் வந்தன. 

முட்டை இதயத்திற்கு கெடுதலானது, ஆரோக்கியமற்றது என சிலர் கருதிவருகிறார்கள். ஆனால் கிட்டதட்ட 32 ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வின்படி, முட்டைகளால் இதயத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்துள்ளது. முட்டையின் நிறைவுற்ற கொழுப்புகள் ஒருவரின் இதய ஆரோக்கியம், கெட்ட கொழுப்பின் மீது சாதகமான விளைவுகளை தான் ஏற்படுத்துகின்றன. 

Tap to resize

Image Credit: Getty Images

உடல் எடையை குறைப்பதற்காக பலர் குறைவான உணவை எடுத்து கொள்கிறார்கள். இதனால் சிலருக்கு தேவையான கலோரி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. அவர்கள் முட்டையை உண்ணலாம். ஒரு முட்டையில் மொத்தம் 74 கலோரிகள் தான் இருக்கின்றன. அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களோ மிக அதிகம். முட்டைகள் சாப்பிடுவது உங்களை முழுதாக உணரவைக்கும். பசி எடுக்காது. உணவில் முட்டைகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த கலோரி அளவையே குறைக்கலாம்.

Image: Getty Images

தினமும் முட்டைகளை சாப்பிடுவது எளிதானது என்றாலும், சாதாரணமாக முட்டைகளை உண்பது உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்காது என்பதை பலர் நினைக்கிறார்கள். நார்ச்சத்து, கொழுப்பின் ஆதாரம் - மற்ற ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளுடன் முட்டைகளை எடுத்து கொள்வது முக்கியம். ஊட்டச்சத்து நிபுணர்கள் முட்டையுடன், பலவகையான காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். 

இதையும் படிங்க: சாக்கு பையில் பேண்ட்.. இதுக்கு போய் இத்தனை ஆயிரம் ரூபாயா.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க!

முட்டைகளை கொண்டு உணவு சமைக்கும்போது கொழுப்பைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைத் தவிர்ப்பது அவசியம். இதனால் தேவையில்லாத நிறைவுற்ற கொழுப்புகள் உடலில் சேரும். அதற்கு பதிலாக ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி முட்டையை சமைக்கலாம். முட்டைகளை உட்கொள்ள சிறந்த வழிகள் உள்ளன. கோதுமை பிரெட், காய்கறிகளோடு உண்பது செம்ம காம்போ. முட்டையுடன் வெள்ளைக் கருவை மட்டும் உண்பது கூட நல்லது. அவித்தும் உண்ணலாம். இதயத்துக்கு நல்ல புரதச்சத்து அவசியம். நாள்தோறும் முட்டை உண்பதை ஒருபோதும் நிறுத்தவேண்டாம். அதில் பல நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அவித்த முட்டைகளை உண்ணலாம். 

இதையும் படிங்க: கொடுமையே.. தாய்ப்பால் குடிக்கும்போது பிறந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. இப்படியுமா நடந்து தொலைக்கணும்..

Latest Videos

click me!