சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கட்டுக்கதையும் உண்மையும்!

First Published | Feb 14, 2023, 1:43 PM IST

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா என்பது குறித்து மருத்துவரின் விளக்கம். 

சர்க்கரை நோயாளிகள் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளது. மருத்துவர் அறிவுரையின்படி உணவு எடுத்து கொள்வதே பரிந்துரைக்கப்படுகிறது. சில சர்க்கரை நோயாளிகள் தேன் நெல்லிக்காய், பாலில் தேன் விட்டு அருந்துவது ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதை உண்ண விரும்புகின்றனர். இது சரியா? என்பது குறித்து மருத்துவரிடம் கேட்கப்பட்டது.  

வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கருப்பட்டி எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. எதற்கும் உங்களுடைய மருத்துவரை ஒருமுறை கேட்டு கொள்வது நல்லது. ஒவ்வொரு நோயாளியின் உடலும் ஒவ்வொரு மாதிரியானவை.  

Latest Videos


எந்த மருத்துவரும் சர்க்கரை நோயாளிகள் தேன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் ஒரு தேக்கரண்டி தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. 

சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு தேன் நெல்லிக்காய் நல்லது என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. ஆனாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அது உகந்து அல்ல என்கின்றனர் மருத்துவர்கள். 

இதையும் படிங்க: valentines day 2023: காதல் என்றால் என்ன? பார்வதியின் கேள்விக்கு சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா?

பொதுவாகவே நாம் உண்ணும் தேனில் பொட்டாசியம் இல்லை. அதனால் எந்த வகையிலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவாது என்பதால் தவிர்ப்பதே நலம். 

இதையும் படிங்க: லட்சக்கணக்கில் வருமானம் இருந்தும் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடும் ஸ்ரீதர் வேம்பு, என்ன காரணம் தெரியுமா?

click me!