மறக்காமல் தினமும் 2 வெற்றிலை மட்டும் சாப்பிட்டு பாருங்க, உடல் நச்சுக்களை வெளியேற்றி பல நன்மை செய்யும்..

First Published | Feb 11, 2023, 6:38 PM IST

Vetrilai Benefits: வெற்றிலை நம் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல், பலவிதமான மருத்துவ பலன்களையும் அளிக்கிறது. 

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியில் வெற்றிலை இல்லாமல் இருக்காது. பூஜைகளிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் போலவே நம்முடைய உடலில் பல நன்மைகளை செய்வதிலும் வெற்றிலையின் பங்கு உள்ளது. சிலர் வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வெற்றிலையை உண்கின்றனர். இதில் உள்ள மற்ற நன்மைகளை இங்கு காணலாம். 

வெற்றிலை சிறந்த நச்சு நீக்கி. நம் உடலில் சேரும் அழுக்குகளை வெற்றிலை நீக்கும். நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை சீராக வைக்க உதவுகிறது. 

Latest Videos


வெற்றிலை வயிற்றில் உள்ள பியூரின் அளவை அதிகரிக்காமல் செய்யும். உடலில் எப்போது யூரிக் அமிலம் கட்டுப்பாடில்லாமல் அதிகமாகிறதோ, அப்போது மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு வெற்றிலையை உண்ணலாம். 

முன்னோர் சளி, காய்ச்சல், நெஞ்சு இறுக்கம், சுவாசக்கோளாறு ஆகியவை குணமாக்க வெற்றிலை பயன்படுத்தப்பட்டது. வெற்றிலையை, கிராம்பு நீரில் கொதிக்க வைத்து டீ போல் குடித்து வர சுவாசக் கோளாறுகள் பறந்து போகும். தலைவலிக்கு வெற்றிலையால் பத்து போடலாம். வெற்றிலை தைலம் பூசலாம். 

வெற்றிலை உண்பதால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகின்றன. நம் உடலில் காணப்படும் பல நச்சுப்பொருள்களை வெற்றிலை சுத்தம் செய்கிறது. வெற்றிலை சர்பத் அருந்தினால் யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.  

இதையும் படிங்க: சமைக்கும்போது எதையும் வேஸ்ட் ஆகாம முழுசா பயன்படுத்த, இல்லத்தரசிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்

இதையும் படிங்க: குடும்ப பெண்கள் செய்யும் இந்த ஒரு தவறால், வீட்டில் மகாலட்சுமி தங்காமல் போகிறாள்.. என்ன காரணம் தெரியுமா?

click me!