மறந்தும் பாலுடன் இந்த உணவை சாப்பிட வேண்டாம்.. ஆபத்து நிறைந்த இந்த உணவு காம்பினேஷன் குறித்து தெரியுமா?

First Published | Feb 7, 2023, 11:56 AM IST

பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பால் கொண்டுள்ளது. ஆனாலும் பாலுடன் உண்ணக்கூடாத சில உணவுகள் குறித்து இங்கு காணலாம். 

பாலில் புரதம், கொழுப்புச்சத்து, கொஞ்சம் மாவுச்சத்து, மெக்னீசியம் ஆகியவை காணப்படுகிறது. தினமும் பால் அருந்துவதால் அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் என மருத்துவர்களும் வலியுறுத்துகின்றனர். பால் நம் எலும்புகளை வலுப்படுத்தும். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளிகளுக்கு கூட பால் ஏற்றது. இரவில் பாலில் தேனும் வெண்ணிலா எசன்ஸும் கலந்து அருந்தினால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதில் பொட்டாசியம் காணப்படுவதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். ஆனாலும் பாலுடன் சில உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது குறித்து இங்கு காணலாம். 

கோழிக்கறி உண்ணும்போது பால் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை இரண்டும் செரிமானம் ஆக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள் என்பதால் சிரமத்தை ஏற்படுத்தும். 

Latest Videos


சிட்ரஸ் பழங்களை பாலுடன் எடுத்துக் கொள்ளக்கூடாது. சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை உடையவை, இவை பாலில் கலந்தால் பாலில் உள்ள சேர்மங்கள் சிதையும். அதனால் எலுமிச்சை, ஆரஞ்சு வகை சிட்ரஸ் பழங்களை பாலுடன் எடுத்து கொள்ளக்கூடாது. 

பாலுடன் தர்பூசணிப் பழத்தை உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். அது மட்டுமின்றி முலாம் பழமும் பாலுடன் உண்ணாக்கூடாத பழம் தான். 

பால் அருந்தும் போது மீன் உண்பதால் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அது மட்டுமின்றி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிப்புக்கு உள்ளாகும். 

eat this with milk to gain weight!

ஆயுர்வேதத்தின் படி, வாழைப்பழத்தை உண்ணும்போது, பாலை எடுத்துக் கொண்டால் நம் உடலில் நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. முள்ளங்கி எடுத்து கொண்ட பிறகு பால் அருந்தக் கூடாது. இவற்றை ஒரே நேரத்தில் உண்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

பப்பாளியும், பாலும் மோசமான காம்பினேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். இவை செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். அது போல முட்டையும், பாலும் ஒன்றாக எடுத்து கொள்ள ஏற்றவை அல்ல. பாலில் உள்ள சத்துக்களை பெற விரும்புபவர்கள் அதை தனியாக எடுத்துக் கொள்வதே நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

இதையும் படிங்க: வெறும் 2 நிமிடங்களில் சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும் கொய்யா இலை... எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஸ்பீடா? ம்ஹூம்... மெல்ல தீண்டும் விரல் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.. நிபுணர் அட்வைஸ்

click me!