வாரம் ஒரு தடவை டிராகன் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அளவில்லா நன்மைகள் உறுதி.. மிஸ் பண்ணாதீங்க!

First Published | Feb 6, 2023, 11:42 AM IST

டிராகன் பழங்களை உண்பதால் உடலில் பல ஆரோக்கிய நன்மைகள் பெருகும். அதன் முழுபலன்களை எப்படி பெறுவது என்பதை இங்கு காணலாம். 

பழங்கள் நம் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றக் கூடியவை. நம்முடைய பிட்னஸை சீராக பராமரிக்க பழங்களை சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ​​இன்றைய காலக்கட்டத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாதுளை ஆகியவை நம் நினைவுக்கு வரலாம். ஆனால் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கரடு முரடாக இருக்கும் டிராகன் பழமும் நம் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. தென் அமெரிக்காவில் அதிகம் காணப்படும் இந்த பழத்திற்கு, பிடாயா என்றொரு பெயரும் உண்டு. இதில் இருவகைகள் உண்டு. உட்புறம் வெள்ளை கூழ், சிவப்பு கூழ் என இருநிறங்களில் இவை காணப்படுகிறது. இதன் நன்மைகள் குறித்து இங்கு காணலாம். 

டிராகன் பழத்தில் இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. பிளாவனாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், நார்ச்சத்து ஆகியவையும் இந்த பழத்தில் காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு, ஏற்கனவே அதிகரித்த சர்க்கரை அளவையும் குறைக்கும். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், டிராகன் பழத்தை உண்பதை பழக்கமாக்கலாம்.  

Tap to resize

சர்க்கரை வியாதி ஒரு தீவிர நோய். சில சமயங்களில் இது இதய நோய்க்கு காரணமாகிவிடுகிறது. இப்படி சர்க்கரை வியாதியால் இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அதிகரிப்பு என நிபுணர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் ஆக்ஸிஜனேற்றத்தை குறைக்கும் பழங்கள், காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். அப்படி பார்த்தால் பீட்டாலைன்கள், பாலிபினால்கள், அஸ்கார்பிக் அமிலம் ஆகிய பல ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் டிராகன் பழத்தில் உள்ளன. எனவே இவை இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவும். 

புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு டிராகன் பழம் மிகவும் நல்லது. இதில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ளன. சில ஆய்வுகள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக தெரிவிக்கின்றன. ஆனாலும் புற்றுநோய் நோய்க்கு மருந்தாக டிராகன் பழத்தை உண்பதற்கு முன்பு மருத்துவரிடம் கேட்கவும். 

கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்தால் நமது இரத்த நாளங்களில் கழிவுப் பொருட்கள் சேரும். இதனால் இரத்த நாளங்கள் சுருங்க தொடங்குகின்றன. இப்படி நடப்பதால் ரத்த ஓட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு, இதயம் மாதிரியான முக்கிய அத்தியாவசிய உறுப்புகளைச் சரியாகச் சென்றடைய முடியாமல் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. இதனை தடுப்பதில் டிராகன் பழம் உதவுகிறது. மேற்கண்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் டிராகன் பழத்தை உண்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனைகள் பெற்று கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால் போதும்.. சில நோய்க்கு மாத்திரையே போட வேண்டாம் தெரியுமா?

இதையும் படிங்க: தினமும் இளநீர் குடிக்கிறது ரொம்ப தப்பு.. நிபுணர்கள் ஏன் எச்சரிக்கிறார்கள்?

Latest Videos

click me!