அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலும் மீன், சிக்கன், மட்டன் போன்ற உணவுகள் தான் நம் நினைவுக்கு வரும். பிரதானமாக வீடுகளில் சமைக்கும் அசைவ உணவுகளும் இவை தான். ஆனால் கடல் உணவான நண்டு உண்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. எப்போதும் நண்டு உண்ண முடியாவிட்டால் கூட 2 வாரத்திற்கு ஒருமுறையாவது உண்ணலாம். இதிலுள்ள நன்மைகளை காணலாம்.
நண்டில் மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடும்போது குறைந்த கலோரிகள் தான் உள்ளது. நீங்கள் 100 கி நண்டு எடுத்து கொண்டால் 1.5 கி தான் அதில் கொழுப்பு இருக்கும். மிச்சத்தில் புரத சத்து தான் காணப்படும். எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நண்டு நல்ல தேர்வாக இருக்கும்.
நண்டு உண்ணும்போது வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்பட உதவும். கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் நண்டு உண்ணலாம். இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடலாம். இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.