கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் வளர்ப்பர். அதன் கீரை, காய் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்கள். இதன் மணமும் சுவையும் அலாதியானது. இதை உணவில் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் உள்ளது. இதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த சோகை, இதய நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் தொடர்பான நோய்களால் அவதிபடுபவர்களுக்கு முருங்கை கீரை மிகவும் நல்லது. இதனை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் வலிமை பெறும். ஈறுகளில் பிரச்சனை இருந்தால் சீராகும்.
சிலருக்கு உடலில் உள்ள வெப்பத்தால் வாயில் புண் வரும். இந்த புண்களுக்கு முருங்கை கீரை எடுத்து கொள்வது நல்லது. புண்கள் விரைவில் குணமாகும். முருங்கை கீரையை சாப்பிடும்போது சருமத்தில் வரும் சுருக்கங்கள் விரைவில் குறையும். சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது.
முருங்கை கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து கொஞ்சம் மிளகு, உப்பு சேர்த்து அருந்தினால் மலச்சிக்கலுக்கு முடிவு வரும். இதனால் உடல் வெப்பமும் தணியும். முருங்கை இலையை காம்புகள் இல்லாமல் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகமாகும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள பெண்களுக்கு முருங்கை இலையை சமைத்து கொடுக்கலாம். இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகமா வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் பாகற்காய்.. மிஸ் பண்ணாம சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள்!