மண் வாசனை வீசும் இந்த அரிசியை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது.. பல வகை அரிசிகளும் பயன்களும் தெரியுமா?

First Published | Feb 2, 2023, 12:31 PM IST

வகை வகையான அரிசி இருந்தாலும் எந்த அரிசி உண்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. 

ஆசிய மக்களுக்கு அரிசி பிரதான உணவு. நம் தமிழகத்தை பொருத்தவரை, அரிசி உணவுகள் இல்லாமல் நாள் நகராது. பெரும்பாலானவர்களின் வீட்டில் வெள்ளை நிற அரிசி தான் இருக்கும். ஆனால் அரிசியில் பல வண்ணங்களும், அதற்கேற்ற நன்மைகளும் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? பிரவுண் அரிசி, சிவப்பரிசி, கருப்பு அரிசி ஆகியவை இப்போது பழக்கத்தில் உள்ளன.  

வெள்ளை அரிசி 

பிற அரிசி வகைகளை காட்டிலும் வெள்ளை அரிசியில் தான் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. எடை குறைப்பு மாதிரியான காரணங்களுக்காக குறைவான கலோரி உணவை எடுத்து கொள்ள விரும்புபவர்கள் இதை கொஞ்சமாக உண்ண வேண்டும். இதில் நார்ச்சத்து குறைவாகவே உள்ளது. 

Tap to resize

பிரவுண் அரிசி 

இந்த அரிசியில் வெளிப்புற தவிடு லேயர் மட்டும் தான் நீக்கப்பட்டிருக்கும். இதை பார்க்க பாலிஷ் செய்யப்பட்ட அரிசி போல இது தெரியாது. வைட்டமின்கள், மெக்னீசியம், செலீனியம், தியமைன், நியசின், வைட்டமின் பி6 ஆகியவை காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்ணலாம்.  

சிவப்பு அரிசி 

ஹிமாலயன் அரிசி அல்லது பூட்டான் அரிசி என சிவப்பு அரிசியை அழைக்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். இரும்புச்சத்து மிகுந்தது. ஆரோக்கியமானது. 

இதையும் படிங்க: பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாமா சர்க்கரை நோயாளிகள்?

கருப்பு அரிசி 

மண் வாசனை வீசும் இந்த அரிசி வைட்டமின்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை நிரம்ப பெற்றுள்ளது. விட்டமின் இ, இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. எல்லா அரிசியைவிடவும் நார்ச்சத்து, புரதம், ஆண்டிஆக்ஸிடண்ட் மிகுந்தது கருப்பு அரிசி தான். இதை பிற அரிசியை விட ஆரோக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் பாகற்காய்.. மிஸ் பண்ணாம சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள்!

Latest Videos

click me!