வெறும் 2 நிமிடங்களில் சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும் கொய்யா இலை... எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

First Published | Feb 6, 2023, 12:40 PM IST

கொய்யா இலையில் பல மகத்துவமான மருத்துவ நன்மைகள் உள்ளன. அதை எப்படி பயன்படுத்தினால் முழுபலனும் கிடைக்கும் என்பதை குறித்து இங்கு காணலாம். 

கொய்யா பழத்தை உண்ணும்போது இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நமது உடலுக்கு கிடைக்கின்றன. இதனால் கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது முதலாக பல நன்மைகள் கிடைக்கும். அதைப் போலவே கொய்யா இலைகளிலும் பல நன்மைகள் காணப்படுகின்றன. அதை கழுவி வெறும் வாயில் அப்படியே மென்று உண்ணலாம்.  

கொய்யா இலைகள் செரிமான அமைப்பில் இருக்கும் நச்சு நுண்ணுயிரிகளை கொல்லுகின்றது. அதனால் குடல் இயக்கம் மேம்படும். இதனால் உங்களுக்கு மலச்சிக்கல் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட அமிலத்தன்மை தொடர்பான நோய்கள் குணமாகும். கொய்யா இலையை வைத்து டீ தயாரித்து அருந்தினால், வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்ற முடியும். 

Tap to resize

கொய்யா டீயை அருந்தினால் சருமம் பொலிவாகும். கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். இதில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாக உள்ளன. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், பருக்கள் ஆகியவையும் குறையும். கொய்யா இலையில் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  

கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த சாறை அருந்தினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ராலையும் குறைக்க முடியும். இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். அது மட்டுமின்றி மூச்சுக்குழாய் அழற்சி, பல்வலிகளில் நிவாரணம், ஒவ்வாமை, காயங்கள், தொண்டை புண் ஆகியவை குணமாகவும் உதவுகிறது. 

கொய்யா இலைகள் பாலியல் உறவில் நன்கு செயல்பட உதவும். ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இனப்பெருக்க ஆரோக்கியம் நன்றாக வரும். கொய்யா இலைகள் சாப்பிடுவது நல்லது. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்ட, பெண்களுக்கு பிரசவ கால துன்பங்களைக் குறைக்கவும் உதவும். குறிப்பாக மாதவிடாய் வலியை குறைக்க கொய்யா டீ உதவும். பெண்களின் கருவுறுதல் திறன் மேம்படும். 

நீரில் 4 முதல் 5 கொய்யா இலைகளை கொதிக்க வைத்து, நன்கு இலைகளின் சாறு இறங்கியதும் வடிகட்டினால் கொய்யா டீ தயார். இதனை குடித்து வந்தால் மேலே சொன்ன பல நன்மைகள் கிடைக்கும். மற்ற நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளலாம். 

இதையும் படிங்க: வாரம் ஒரு தடவை டிராகன் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அளவில்லா நன்மைகள் உறுதி.. மிஸ் பண்ணாதீங்க!

இதையும் படிங்க: தினமும் இளநீர் குடிக்கிறது ரொம்ப தப்பு.. நிபுணர்கள் ஏன் எச்சரிக்கிறார்கள்?

Latest Videos

click me!