நெல்லிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விருப்பமானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஆனால் குளிர்காலத்தில் வரும் சில தொற்றுநோய்களை தடுக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நெல்லிக்காய் உண்ணும்போது பெறலாம்.
துவர்ப்பு சுவைக்கு பிறகு இனிப்பையும் உணர செய்யும் நெல்லிக்காய்யில் பைட்டோ நியூட்ரியன்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளது. ஆகவே மூளை செல்களை கவசம் போல பாதுகாக்கும் சக்தி நெல்லிக்காயில் இருக்கும்.
வைட்டமின் சி சத்து உள்ள நெல்லிக்காய், நினைவாற்றலை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஊறுகாய் முதலியவற்றை அளித்து ஊட்டமளிக்கலாம்.
'முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்னொரு சொலவடை உண்டு. இதய ஆரோக்கியம், செரிமான கோளாறு, சரும பளபளப்பு என நெல்லிக்காய் பல நன்மைகளை செய்கிறது. இந்த பலன்களை பெற வேண்டும், ஆனாலும் நெல்லிக்காய் நேரடியாக உண்ண விரும்பாதவர்கள் ஜூஸாக அருந்தலாம். அதன் செய்முறையை காணலாம்.