தூக்கி எறியும் பப்பாளி விதைகளுக்குள் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்கோ!

First Published Feb 13, 2023, 12:06 PM IST

பப்பாளியை போலவே அதன் விதைகளும் பல நன்மைகளை கொண்டுள்ளன. 

பப்பாளி ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். அதன் விதைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் ஆகியவையும் நிறைந்துள்ளன. துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்களும் இதில் உள்ளன. இதன் மருத்துவ நன்மைகளை இங்கு காணலாம். 

பப்பாளி விதையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இந்த விதைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகின்றன. இது அதிகமாக கொழுப்பை சேமித்து வைக்காமல் உடலை பாதுகாக்கும். உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவும்.  

பப்பாளி விதையில் இருக்கும் கார்பைன் என்ற பொருள், குடலில் உள்ள புழுக்கள், பாக்டீரியாக்களை அழிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கும். செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படும். இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. 

பப்பாளி விதைகளை உண்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும். இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. பப்பாளி விதைகளில் பாலிஃபீனால் உள்ளது. இவை வலுவான ஆக்ஸிஜனேற்றிகள். அவை பல வகையான புற்றுநோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். சுமார் 5 முதல் 6 பப்பாளி விதைகளை எடுத்து, அவற்றை அரைத்து, உணவில் அல்லது பழச்சாறில் சேர்க்கவும். இது வீக்கத்தைக் குறைக்கும். 

மாதவிடாய் வலியைக் குறைக்கும் வல்லமை கொண்டது. பப்பாளியில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்கி உடலை பேணும். பப்பாளி விதைகள் மாதவிடாயைத் தூண்டி சீராக்கும். மாதவிடாய் வலிக்கு நிவாரணமாக இருக்கும். 

click me!