Tandoori Egg : ஹோட்டல் ஸ்டைல் முட்டை தந்தூரி .. சுவை அள்ளும் ஈஸி ரெசிபி!

Published : Nov 03, 2026, 05:24 PM IST

Tandoori Egg : முட்டையை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? தயிர், காரசாரமான மசாலா சேர்த்து கடாயிலேயே ஹோட்டல் ஸ்டைல் முட்டை தந்தூரி செய்வது எப்படி? எளிய செய்முறை, தேவையான பொருட்கள் மற்றும் சுவை கூடும் டிப்ஸ் இதோ.

PREV
18
ஹோட்டல் ஸ்டைல் முட்டை தந்தூரி

முட்டையை எப்போதும் ஒரே மாதிரி வேகவைத்தோ, ஆம்லெட் போட்டோ சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாகவும், காரசாரமாகவும் முட்டை தந்தூரி செய்து பாருங்கள்.

தயிர், மசாலா பொடிகள், இஞ்சி-பூண்டு பேஸ்ட் என அசத்தலான சுவை தரும் பொருட்களில் முட்டையை ஊறவைத்து, கடாயிலேயே பொன்னிறமாக வறுத்து எடுத்தால் போதும். வெளிப்புறம் மசாலா படிந்து சுவையாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த முட்டை தந்தூரி, மாலை நேர ஸ்நாக்ஸ் முதல் பார்ட்டி ஸ்டார்டர் வரை அனைவரையும் கவரும்.

ஹோட்டலில் சாப்பிடும் தந்தூரி சுவையை வீட்டிலேயே, தந்தூரி அடுப்பு இல்லாமல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

28
முட்டை தந்தூரி செய்ய தேவையான பொருட்கள்
  • முட்டை - 4
  • கெட்டியான தயிர் - 4 டேபிள்ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1\4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள்- 1\2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1\2 டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி - 1\2 டீஸ்பூன்
  • கடுகு எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
38
முட்டை தந்தூரி செய்முறை - படி 1

முதலில் முட்டைகளை வேகவைத்து, ஆறியதும் ஓடுகளை நீக்கிக் கொள்ளவும். பின்னர் முட்டையின் மேற்பரப்பில் கத்தியால் லேசாகக் கீறல்கள் போடவும் அல்லது ஒரு ஸ்போர்க் ஸ்பூன் (Spork) வைத்து மெதுவாகக் குத்திக் கொள்ளலாம். இதனால் மசாலா முட்டையின் உள்ளே நன்றாகப் பிடித்து சுவை அதிகரிக்கும்.

48
படி 2

தந்தூரி மசாலா தயார் செய்யவும்

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

இதனுடன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலந்து, கட்டிகள் இல்லாத மசாலா கலவையாகத் தயார் செய்யவும்.

58
படி 3

முட்டைகளை மசாலாவில் ஊற வைக்கவும்

வேகவைத்து தோலுரித்த முட்டைகளை மசாலா கலவையில் சேர்த்து, எல்லா பக்கங்களிலும் மசாலா நன்றாகப் படும்படி மெதுவாகப் புரட்டவும். இதனை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

68
படி 4

கடாயில் தந்தூரி முட்டையை வறுக்கவும்

ஒரு தோசைக்கல் அல்லது அகலமான கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.ஊறவைத்த முட்டைகளை நீளமான குச்சியில் சொருகிக் கொள்ளலாம். குச்சி இல்லையென்றால் நேரடியாகக் கடாயிலும் வறுக்கலாம்.

78
படி 5

முட்டைகளை கடாயில் வைத்து, அவ்வப்போது திருப்பி அனைத்து பக்கங்களிலும் மசாலா பொன்னிறமாகவும், லேசாக கருகிய தந்தூரி தோற்றத்திலும் வரும் வரை வறுக்கவும். மசாலா எளிதில் கருகிவிடும் என்பதால், மிதமான தீயில் வைத்து கவனமாக வறுப்பது அவசியம். தேவையெனில் சிறிதளவு எண்ணெய் தெளித்துக் கொள்ளலாம்.

88
படி 6

சுவையான முட்டை தந்தூரி தயார்

வறுத்த முட்டைகளை ஒரு தட்டில் எடுத்து, மேலே சிறிதளவு சாட் மசாலா மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவவும். சூடான முட்டை தந்தூரியை புதினா சட்னி, வெங்காயத் துண்டுகள் மற்றும் எலுமிச்சை சில்லுகளுடன் பரிமாறினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

முட்டை தந்தூரி சுவையாக வர சில டிப்ஸ்

  • தயிர் தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருந்தால் மசாலா முட்டையில் நன்றாகப் பிடிக்கும்.
  • கஸ்தூரி மேத்தியை உள்ளங்கைகளில் நசுக்கிச் சேர்த்தால் நல்ல மணம் கிடைக்கும்.
  • கடுகு எண்ணெயை சூடாக்கிய பிறகு தீயைக் குறைத்து முட்டைகளை வறுக்கவும்.
  • தந்தூரி சுவை அதிகமாக வேண்டும் என்றால், இறுதியில் சிறிதளவு வெண்ணெய் தடவலாம்.


சூடான, காரசாரமான முட்டை தந்தூரி தயார். எளிமையான வேகவைத்த முட்டையை இப்படி மசாலா சேர்த்து வறுத்தால், வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் ஸ்டார்டர் கிடைத்துவிடும். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிடவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் ஏற்ற ரெசிபி இது.

Read more Photos on
click me!

Recommended Stories