
தீபாவளி என்றாலே அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டில் பட்டாசு சத்தம் முழங்க குடும்பத்துடன் கொண்டாடும் அந்த மகிழ்ச்சியே தனி.
அதிலும், தீபாவளி காலையில் குளித்துவிட்டு வந்து, ஆவி பறக்கும் இட்லியை தட்டில் வைத்து, அதன் மீது மணக்க மணக்க தயாரான ஆட்டுக்கால் பாயாவை ஊற்றி சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடு இணை எதுவுமே இருக்காது.
மென்மையான இட்லிக்குள் இறங்கும் ஆட்டுக்கால் பாயாவின் காரசாரமான சுவையும், மசாலா மணமும், நாவில் கரையும் ஆட்டுக்கால் துண்டுகளும் சேர்ந்து முதல் வேளையிலேயே தீபாவளியை இன்னும் சிறப்பாக்கிவிடும்.
ஹோட்டல் ஸ்டைலில், வீட்டிலேயே கெட்டியான சுவையான ஆட்டுக்கால் பாயா செய்து, இந்த தீபாவளியை வயிறும் மனமும் நிறைந்த கொண்டாட்டமாக மாற்றலாம். இதோ, இட்லிக்கு தொட்டுக்க சாப்பிட ஏற்ற ஆட்டுக்கால் பாயா செய்முறை.
ஆட்டுக்கால் வேகவைக்க
பாயா மசாலா தயாரிக்க
ஆட்டுக்காலை சுத்தம் செய்தல்
ஆட்டுக்கால்களை வாங்கும்போதே நன்றாக சுத்தம் செய்து, முடிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும். வீட்டிற்கு வந்ததும் வெந்நீரில் நன்றாக கழுவி, தேவையற்ற அழுக்குகளை நீக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆட்டுக்கால், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அலசி மீண்டும் சுத்தமான தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
ஆட்டுக்காலை வேகவைத்தல்
குக்கரில் சுத்தம் செய்த ஆட்டுக்கால், ஒரு நறுக்கிய வெங்காயம், ஒரு தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 முதல் 15 விசில் வரும் வரை வேகவைக்கவும். ஆட்டுக்கால் நன்றாக மென்மையாக வேக வேண்டும்.
குறிப்பு: ஆட்டுக்கால் எலும்பிலிருந்து எளிதாக பிரியும் அளவுக்கு வெந்திருக்க வேண்டும். வேகவைத்த தண்ணீரை வடிகட்டாமல் அப்படியே வைத்துக்கொள்ளவும். அதுதான் பாயாவுக்கு சுவையும் கெட்டித்தன்மையும் கொடுக்கும்.
தேங்காய் மசாலா அரைத்தல்
மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா மற்றும் முந்திரி சேர்த்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பாயாவுக்கு மசாலா தாளித்தல்
மசாலா தூள்கள் சேர்த்தல்
இப்போது மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். மசாலா கருகாமல் இருக்க சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கவும்.
ஆட்டுக்கால் மற்றும் தேங்காய் விழுது சேர்த்தல்
ஆட்டுக்கால் பாயா தயார்
ஆட்டுக்காலில் மசாலா நன்றாக இறங்கி, பாயா சற்று கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கத் தொடங்கும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.
தீபாவளி காலையில் எண்ணெய் குளியல் முடித்து, புத்தாடை அணிந்து, வீட்டில் தயாரான சூடான இட்லியுடன் இந்த ஆட்டுக்கால் பாயாவை பரிமாறுங்கள். முதல் இட்லியிலேயே பாயாவின் மசாலா சுவை நாவில் இறங்க, குடும்பத்தினர் அனைவரும் இன்னும் ஒரு இட்லி கேட்பது நிச்சயம்.
இந்த பாயாவை இட்லி மட்டுமின்றி தோசை, ஆப்பம், இடியாப்பம் கியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.