முதல்ல துவரம் பருப்பை நல்லா கழுவி, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து குக்கர்ல ரெண்டு விசில் விட்டு வேக வச்சு எடுத்துக்கோங்க. ரொம்ப குழைய விட்டுறாதீங்க.
குக்கர்ல எண்ணெய் ஊத்தி சூடானதும், பட்டை,லவங்கம்,ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும் பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கவும், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கவும், பின்னர் ஆட்டுக்கறியை சேர்த்து கறியோட கலர் மாறுற வரைக்கும் வதக்கவும், கொஞ்சம் உப்பு சேர்த்து குக்கரை மூடி கறி நல்லா வேகுற வரைக்கும் வேக வைக்கவும்.
கறி வெந்ததும், அதனுடன் வேக வச்ச துவரம் பருப்பை மற்றும் புளி கரைசலை ஊத்தி ஒரு கொதி விடவும்,.
கரம் மசாலா தூள், கொத்தமல்லி தழை சேர்த்து, கடைசியா தேங்காய் பால் சேர்த்து லேசா கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. சூப்பரான தால்ச்சா ரெடி, இதை சுட சுட பிரியாணியோட பரிமாறி அசத்துங்க, இது பிரியாணிக்கு ஒரு அருமையான காம்பினேஷனா இருக்கும்.