மதுரையின் புகழ்பெற்ற உணவுகளில் அசைவ உணவுகளுக்கு தனி இடம் உண்டு. அதில் மட்டன் குழம்பிற்கு ஃபேன்ஸ் அதிகம். மதுரையில் கிராமத்து வீடுகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் மட்டன் வெங்காய கறி எப்படி செய்வது என்ற பக்குவத்தை தெரிந்து கொள்ளலாம்.
மதுரை, ஜிகர்தண்டா, மீனாக்ஷி அம்மன் கோயில், பின்னால் ஆட்டுக்கறி சப்பாத்தி ஸ்பெஷலுக்கு பெயர் போன ஊரு. அந்தப் பட்டியலில் டாப்ல ராங்குக்கு வரும் அயிட்டம் தான் மட்டன் வெங்காயக் குழம்பு. மதுரை ஹோட்டல்கள் மட்டும் இல்ல, வீடுகளிலும் இந்த ரெசிபி செஞ்சா அது ஒரு ஃபீஸ்ட் மாதிரி இருக்கும்.மதுரை மட்டன் குழம்பு பற்றி கேட்டாலே நம்ம ஊர்காரர்களுக்கு மகிழ்ச்சி தானாக வரும். சின்ன சின்ன ஹோட்டல்களில் இருந்து பெரிய ஹோட்டல் வரை, இதுக்கு தனி ஃபேன் பேஸ் இருக்குது. இந்த குழம்புக்கு ஹீரோ, மட்டன்தான். ஆனா அதன் ஜோடி வெங்காயம் தான். சற்று அதிகமாகவே வெங்காயம் சேர்த்து செய்வார்கள். சின்ன வெங்காயம் தான் முக்கியம். அது தான் குழம்புல அந்த வித்தியாசமான மண் வாசனை சுவை வர காரணம்.
26
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் (நல்லெண்ணெய் சேர்ப்பது தான் சூப்பராக இருக்கும்)
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கணும். வெங்காயம் நன்றாக வதங்கி வரும் வரை வதக்கணும். இதுவே இந்த குழம்புக்கு ஸ்பெஷல் சுவை தரும்.
- இஞ்சி பூண்டு விழுதும், பச்சை மிளகாயும் போட்டு வாசனை போனதும் தக்காளியும் சேர்த்து நன்கு மசிய விடணும்.
- இப்போது அனைத்து மசாலா தூள்களும் போட்டு நன்கு கலக்கணும்.
- மட்டன் துண்டுகளை சேர்த்து, அந்த மசாலாவுடன் நன்றாக கிளறி, சுமார் 5 நிமிஷம் வதக்கணும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊத்து, மூடி வைத்து கொதிக்க விடணும். குக்கரில் போட்டு 4 விசில் வரை வேக வைக்கலாம்.
- குழம்பு பதத்திற்கு ஆகும் வரைக்கும் மிதமான தீயில் கொதிக்க விடணும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
46
இந்த குழம்பு ஏன் ஸ்பெஷல்?
- இதில் பயன்படும் சின்ன வெங்காயம் தான் ஹீரோ. இது போட்டால் தான் குழம்புக்கு ஒரு தனி சுவை, ஒரு "நேச்சுரல் ஸ்வீட்" ஃபிளேவர் வரும்.
- தண்ணீர் சரியான அளவில் சேர்த்து மட்டன் வேக வைப்பது அவசியம்.
- அதிக மசாலா இல்லாமல். எளிமையான தூள்கள்லயே அதிரடிச் சுவை கிடைக்கும்.
56
ருசிக்க நல்ல காம்போ:
சோறு – வெறும் சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
பரோட்டா – மதுரை ஃபேமஸ் பரோட்டாவுடன் சாப்பிட சூப்பர் காம்போ இந்த மட்டன் கறி.
கலக்கி சாப்பாடு – குழம்பு, சாதம், கொஞ்சம் ரசம் கலந்து, அதோடு இந்த மட்டன் சேர்த்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும்.
இது தயார் செய்த உடனே சாப்பிடாதீங்க. ஒரு மணி நேரம் சுடுசுடுன்னு அடுப்புலயே வச்சா, வெங்காயம், மசாலா, மட்டன் எல்லாமே ரொம்ப நன்றாக கலந்து சூப்பர் ருசி வரும்.