kerala curry மணக்க மணக்க கேரள ஸ்டைல் முட்டைக் கறி

Published : Apr 26, 2025, 12:00 PM IST

கேரளா என்றாலே மணக்க மணக்க மசாலா, தேங்காய் எண்ணெய் மணத்திற்கு புகழ்பெற்ற உணவுகள் ஃபேமஸ். மசாலா, தேங்காய் எண்ணெய் இரண்டும் சேர்த்து செய்யும் முட்டைக் கறி மிகவும் ஃபேமசான கேரள உணவாகும். 

PREV
15
kerala curry மணக்க மணக்க கேரள ஸ்டைல் முட்டைக் கறி
கேரள முட்டைக் கறி :

கேரளா உணவுகள் ருசிக்கும் போது, தேங்காய் வாசனை தான் முதலில் வரும். அந்த நேர்த்தியான தேங்காய் பால், கறிவேப்பிலை, மஞ்சள் நிற எண்ணெய் – இவை அனைத்தும் சேரும் போது, ஒரு தனி ஸ்டைல் உணவு உருவாகும். அந்த வகையில் கேரளா முட்டை குழம்பு (Kerala Egg Curry)பலருக்கும் ஃபேவரைட் ஆன ஒன்றாகும். தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி என அனைத்திற்கும் பொருத்தமான உணவாகும். 
 

25
தேவையான பொருட்கள்:

முட்டை – 4 (உரித்ததும், நடுவில் நருக்கவும்)
தேங்காய் பால் – 1 கப் (முதலில் எடுத்து வைக்கவும்)
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
ஹோல் மசாலா (இலச்சி, கிராம்பு, பட்டை) – சிறிது
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – சில இலைகள்
முந்திரி – 5
உப்பு – தேவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மேலும் படிக்க: கன்னியாகுமரி ஸ்பெஷல் ரசவடை ரெபிசி
 

35
செய்முறை:

- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அனைத்து மசாலாக்களையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி எல்லாமே சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்கு மசிய வேண்டும்.
- இப்போ மசாலா தூள்கள் (மஞ்சள், மிளகாய், மல்லி) சேர்த்து நல்லா கிளறவும்.
- முந்திரி பேஸ்ட் போட்டு சிறிது நேரம் வதக்கவும். இது குழம்புக்கு richness தரும்.
- இப்போது தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் தேங்காய் பாலும் சேர்க்கவும்.
- நன்கு கொதிக்கும்போது, முட்டைகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- மேலே கருவேப்பிலை தூவிவிட்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றினால் சூப்பர்.

45
எதோட சாப்பிடலாம்?

அப்பம் – இந்த குழம்புக்கு பர்பெக்ட் ஜோடி.
தோசை– மொறு மொறுப்பான தோசைக்கு, க்ரீமியான இந்த கிரேவி சேர்த்து சாப்பிடுவது சூப்பர் டேஸ்ட் தரும்.
சாதம் – காலை மற்றும் இரவு சாப்பாடோடு கேரளா முட்டை குழம்பு நல்லா செட் ஆகும்.

மேலும் படிக்க: தஞ்சாவூர் ஸ்பெஷல் தேங்காய் சொதி – இப்படி செய்து அசத்துங்க

55
சிறப்பு டிப்:

தயார் செய்த பிறகு, மூடி 10 நிமிஷம் வைக்கவும். எல்லா சுவையும் முட்டையில் ஊறி, full flavor வரும். தேங்காய் எண்ணெய் வாசனையோடு ஒரு authentic Kerala touch கிடைக்கும்.

கேரளா முட்டை குழம்பு,  இது வெறும் ஒரு முட்டை கிரேவி மட்டுமல்ல. இது ஒரு “feel” ஆன சாப்பாடு. எளிமையான பொருட்களில், செம்ம ருசியான உணவு எப்படி உருவாக்கலாம் என்பதுக்கே இது ஓர் உதாரணம்.

Read more Photos on
click me!

Recommended Stories