
கேரளா தனித்துவமான சுவைகள் மற்றும் சமையல் முறைகளுக்கு பெயர் பெற்றது. அங்கு மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று முருங்கைக்காய் கறி மற்றும் ஆப்பம். இந்த ஜோடி ஒரு அற்புதமான உணவு அனுபவத்தை வழங்குகிறது - கறியின் காரமான மற்றும் லேசான புளிப்புச் சுவையும், ஆப்பத்தின் மென்மையான மற்றும் லேசான இனிப்புச் சுவையும் ஒருவருக்கொருவர் மிகச்சிறப்பாக Complement செய்கின்றன.
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 3-4 பற்கள்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1-2 தேக்கரண்டி
மல்லி தூள் (தனியா தூள்) - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - 1/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் பின்னர் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தட்டிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். மசாலா கருகாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கலாம். வெட்டிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலக்கவும்.தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு முருங்கைக்காய் வேகும் வரை சமைக்கவும். முருங்கைக்காய் வெந்ததும், புளி கரைசலை சேர்க்கவும். சில நிமிடங்கள் கொதிக்க விடவும். முதல் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடாமல் மிதமான தீயில் சூடாக்கவும். கறி கெட்டியானதும், கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
மேலும் படிக்க: கேரளா மாவடு பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?
- சிலர் இந்த கறியில் உருளைக்கிழங்கு அல்லது கேரட் போன்ற காய்கறிகளையும் சேர்ப்பதுண்டு.
- வெந்தயப் பொடி மற்றும் பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை சேர்ப்பது கறிக்கு கூடுதல் சுவையை அளிக்கும்.
- தேங்காய் எண்ணெயில் தாளிப்பது கறிக்கு ஒரு சிறப்பான கேரளாவின் சுவையை கொடுக்கும்.
பச்சரிசி (சாதா அரிசி) - 1 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஈஸ்ட் - 1/2 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு
பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை ஒன்றாக சேர்த்து 4-6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை தேங்காய் துருவல், சர்க்கரை மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக அரைத்து மென்மையான மாவாக மாற்றவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து, மூடி போட்டு 8-10 மணி நேரம் அல்லது மாவு இரட்டிப்பாகும் வரை புளிக்க வைக்கவும்.
புளித்த மாவு மிகவும் திக்காக இருந்தால், சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
ஆப்ப சட்டி அல்லது ஒரு சிறிய நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கவும்.ஒரு கரண்டி மாவை எடுத்து சட்டியில் ஊற்றி, சட்டியை வட்டமாக சுழற்றி மாவை பரப்பவும். நடுவில் மாவு தடிமனாகவும், ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்க வேண்டும்.
மூடி போட்டு மிதமான தீயில் ஓரங்கள் பொன்னிறமாகி நடுவில் வெந்து வரும் வரை சமைக்கவும், ஆப்பத்தை சட்டியில் இருந்து எடுத்து சூடாக முருங்கைக்காய் கறியுடன் பரிமாறவும்.
மேலும் படிக்க: மதுரை ஸ்பெஷல் பால்பன் வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
- சிலர் ஆப்ப மாவில் வேகவைத்த சாதம் சேர்ப்பதுண்டு, இது ஆப்பம் மென்மையாக இருக்க உதவும்.
- ஆப்பம் சமைக்கும் போது மூடி வைப்பது அதன் மென்மையை தக்க வைக்கும்.
- தேங்காய் பால் சேர்த்து அரைப்பது ஆப்பத்திற்கு கூடுதல் சுவையை கொடுக்கும்.