Published : May 15, 2025, 06:47 PM ISTUpdated : May 15, 2025, 08:26 PM IST
கோடை காலத்தில் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும் மிகச் சிறந்த பானங்களில் ஒன்று கேரட் மில்க் ஷேக். வெறும் 15 நிமிடத்திலேயே இதை சட்டென செய்து கொடுத்து விடலாம். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி குடிப்பாங்க.
வெயில் காலத்தில் உடல் அதிக வெப்பமடையும்போது, அதை குளிர்விக்க நீரேற்றம் மிக முக்கியம். கேரட் மில்க்ஷேக் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், இது ஐஸ் போன்ற உடனடி குளிர்ச்சியைத் தராது. ஆனால், உடலுக்குத் தேவையான சத்துக்களை அளித்து, நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவும்.
26
கேரட்டின் நன்மைகள்:
கேரட்டில் சுமார் 88% நீர்ச்சத்து உள்ளது. மேலும், பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருப்பதால், இது வைட்டமின் ஏ ஆக உடலில் மாறி சருமத்தை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், சருமத்திற்கு பொலிவையும் ஆரோக்கியத்தையும் தரும்.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் நோய் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக வைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பானமாக இருக்கும். உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிஆக்சிடன்ட்கள் கேரட்டில் உள்ளன.
நறுக்கிய கேரட்டை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைக்கவும். மீதமுள்ள பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான கேரட் மில்க்ஷேக் ரெடி.
கேரட் மில்க்ஷேக்கை ஒரு டம்ளரில் ஊற்றி, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பால் அலங்கரித்து, ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
56
கேரட் மில்க்ஷேக்கின் நன்மைகள்:
கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை கேரட் மில்க்ஷேக்கில் உள்ள பால் மற்றும் கேரட்டின் நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றன.
மில்க்ஷேக் எளிதில் ஜீரணமாகி உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.
கோடை வெயிலுக்கு இந்த மில்க்ஷேக் குடிக்கும்போது, உடலுக்கு ஒரு இதமான குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை தரும்..
66
கூடுதல் குறிப்புகள்:
கேரட்டை நன்றாக வேகவைத்து அல்லது ஆவியில் வேகவைத்து பயன்படுத்துவது ஜீரணத்திற்கு நல்லது.
சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது பேரீச்சை போன்ற இயற்கை இனிப்புகளை பயன்படுத்தலாம்.
மில்க்ஷேக்கின் சுவையை அதிகரிக்க பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளையும் சேர்க்கலாம்.