காலையில் வெறும் வயிற்றில் இந்த 5 விஷயங்களை செய்தால் பிபி, சுகரை குறைக்கலாம்

Published : May 13, 2025, 04:28 PM IST

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க பலரும் படாதபாடு படுகிறார்கள். ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில விஷயங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிபி எனப்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை ஈஸியாக குறைக்க முடியும்.

PREV
15
இலவங்கப்பட்டை நீர் :

தினமும் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீரை குடிப்பதால் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

25
மாதுளை சாறு :

தினமும் காலையில் ஒரு கிளாஸ் மாதுளை சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. மேலும், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

35
ஆளி விதைகள் :

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள் நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் மற்றும் திடீரென உயர்வதைத் தடுக்கவும் உதவுகிறது லிக்னான்கள் மேலும், ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

45
நெல்லிக்காய் :

காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறிய துண்டு நெல்லிக்காயை  அல்லது நெல்லிக்காய் சாறு குடிக்கலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களை வலுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

55
மஞ்சள் தேநீர் :

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் (குர்குமின் உறிஞ்சுதலை அதிகரிக்க) கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மஞ்சள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories